மது பிரியர்களுக்கு பயங்கர அதிர்ச்சி. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.?? அமைச்சர் அதிரடி அறிவிப்பு

By Ezhilarasan BabuFirst Published Oct 25, 2021, 10:35 AM IST
Highlights

மோடி அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி மத்திய அரசிடம் பேசியுள்ளோம், விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும் என்றார்.

தமிழகம் முழுவதும் கோவில்களை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக  மூட நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சென்னை கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோவிலில் உள்ள உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு அறையை இந்து சமயத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். அவருடன் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் இருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், கோடம்பாக்கம் திருவாலீஸ்வரம் திருக்கோயிலில் உலக திருமேனி பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:அதிமுக படுதோல்வி எதிரொலி.. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய புள்ளிகள்.

அந்த அறை முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த விலைமதிப்பற்ற சிலைகள் பாதுகாப்பாக இருக்க இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது என்றார். அதேபோல் சிதம்பரம் நடராஜர் கோயிலை பற்றி முகநூலில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள், நீதிமன்றத்தில் சிதம்பரம் கோவில் பற்றிய வழக்கு நடந்து கொண்டிருப்பதால், பக்தர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இறைவனை வழிபடும் வகையில் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார். அதேபோல சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சட்டப்படி வெளிநாட்டில் உள்ள சிலைகள் மீட்பது குறித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறது. வெளிநாட்டு விவகாரம் என்பதால் மத்திய துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் அது உள்ளது. 

இதையும் படியுங்கள்: தனியாளாக நின்று மிரளவிட்ட தமிழக எம்.பி.. இந்தி திணிப்புக்கு சமாதி.

மோடி அமெரிக்கா சென்ற போது கொண்டு வரப்பட்ட 11 சிலைகள் தமிழகத்தை சேர்ந்தவையாக இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி மத்திய அரசிடம் பேசியுள்ளோம், விரைவில் சிலைகள் மீட்டுக் கொண்டு வரப்படும் என்றார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகம் முழுவதும் கோயில்களை சுற்றி உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றார். கடைகளை அகற்றுவது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார். கொரோனா முடிவடைந்த பின்னர் பக்தி சுற்றுலாவுக்கு பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறியிருப்பது மது பிரியர்கள் மதிச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

click me!