பயங்கர அதிர்ச்சி.. தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்.. சுகாதாரத்துறை செயலாளர் பகீர்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2020, 11:43 AM IST
Highlights

இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமெடுத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன.

பிரிட்டனில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் ஒருவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த எட்டு மாதங்களுக்கும்  மேலாக கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையும் கபளீகரம் செய்து வந்ந நிலையில்  படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தடுப்பூசி வினியோகம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததால் விரைவில் இந்த வைரசுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென பிரிட்டனில் வளர்சிதை மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும்  வேகமாக பரவத் தொடங்கியது. இது முன்பிருந்த வைரஸை காட்டிலும் 70 சதவீதம் வேகமாகப் பரவக் கூடியது எனவும், மிகவும் ஆபத்தானது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்ததால் இது ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

இந்நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் வேகமெடுத்ததைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பிரிட்டன் உடனான விமான போக்குவரத்தை தடை செய்துள்ளன. இந்நிலையில்  பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ்தான்  பரவி உள்ளதா என்பதை கண்டறிய பரிசோதனை மாதிரிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 17 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதியாகி உள்ளது. அவர் பிரத்தியேக அறையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல் அவரின் தொடர்பில் இருந்தவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த நபருடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!