இன்று முதல் இயங்க தொடங்குகிறது டாஸ்மாக் பார்கள்..!! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டு அதிரடி..

By Ezhilarasan BabuFirst Published Dec 29, 2020, 11:24 AM IST
Highlights

 தெர்மல் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார் ஊழியர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும், 

இன்று முதல் டாஸ்மாக் மது கடைகள் உடன் இணைந்த பார்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 6 ஆயிரம்  மதுக்கடைகளில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை அரசு வகுத்துள்ளது. பார்களில்  ஒவ்வொருவரும் 6 அடி தூர இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் முகக்கவசம் அணியவேண்டும், பார்களில் உள்ளவர்கள் எல்லா நேரங்களிலும் முகக் கவசம் அணிய வேண்டும், குறைந்தபட்சம் 40 லிருந்து 60 வினாடிகளுக்கு ஒரு முறை கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சானிடைசர்களைக் கொண்டு அடிக்கடி கைகளை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். வாய் மற்றும் மூக்கை முழுவதுமாக மூடிக் கொள்ளும் வகையில் முக கவசம் அணிய வேண்டும்.

மாவட்டம் மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள ஊழியர்கள் தாங்களாகவே மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், உடல்நலக் குறை உள்ளவர்கள் குறித்து மாநில மற்றும் மாவட்ட ஹெல்ப் லைனுக்கு தகவல் அளிக்க வேண்டும், பார்களில் பணியாற்றுபவர்கள் துப்புவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அனைவரும் தங்களது செல்போனில் ஆரோக்கியா சேது ஆப்பை பதவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். பார்களில் இருக்கைகளில் 50 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. அதிக நெரிசலை அனுமதிக்காமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பார் நுழைவாயிலில் கைகளை சுத்தப்படுத்துவதற்கான சாணிடைசர்களை வைத்து கைகளை கழுவ வேண்டும். 

தெர்மல் பரிசோதனைக்கு பின்னரே உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும். நோய் அறிகுறி இல்லாதவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார் ஊழியர்கள் கையுறை அணிந்து இருக்க வேண்டும், பார்களின் வளாகத்தின் நுழைவுவாயிலில் ஆறு அடி தூர இடைவெளி இருக்க வேண்டும், பார்களில் கொரோனா விழிப்புணர்வு போஸ்டர் ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். பார்களின் மேசைகள் நாற்காலிகள் தொற்று இல்லாதவகையில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த வேண்டும். மேற்கண்ட கட்டுப்பாடுகளை மீறினால் பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!