பயங்கர அதிர்ச்சி: தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மளமளவென உயரும் கொரோனா .. மக்கள் பீதி.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 10:49 AM IST
Highlights

ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் 140  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 166 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல தமிழகத்தில் 20 மாவட்டங்களில் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் நேற்றும் கொரொனா தொற்று  எண்ணிக்கை மளமளவென அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரனோ இரண்டாவது அலையில் கடந்த மே மாதத்தில்  தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தில் இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது,  ஊரடங்குக்கு காரணமாக நோய் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்ததை கண்டறியப்பட்ட நிலையில் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சென்னை, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 26ஆம் தேதி சென்னையில் 122 ஆக பதிவாகிய நிலையில், அடுத்தடுத்த நாட்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கைகள் 139 ஆகவும் 164 ஆகவும் பதிவாகி வந்தது  இந்நிலையில் நேற்று 181 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல கோவையில் நேற்று 179 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று 188 ஆக அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் நேற்று முன்தினம் 140  பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 166 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல தமிழகத்தில் 20 மாவட்டங்களில் தோற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

மேலும், கடந்த 4 தினங்களாக நோய் பாதிப்புகள் சற்று அதிகரித்து இருப்பது பொதுமக்களிடையே மீண்டும் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது குறித்து தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு கொரோனா பரிசோதனை அதிகளவில் செய்யப்படுவதால் நோய்த் தொற்று அதிகரித்துவருவாதக கூறியுள்ளார். 
 

click me!