முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு...!! போகித்தீயில் போட்டு பொசுக்கிய எதிர்கட்சித் தலைவர்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 14, 2020, 6:20 PM IST
Highlights

சந்திரபாபு நாயுடு பேசும்போது மூன்று தலைநகர் திட்டத்தை ஜெகன்மோகன் கைவிடவேண்டும் இல்லையென்றால் இந்த அரசை கலைத்துவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றா

ஆந்திர மாநிலத்திற்கு அமராவதி மட்டுமின்றி மூன்று தலை நகரங்கள் உருவாக்கப்படும் என ஜெகன்மோகன் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தெலுங்குதேசம் கட்சி போகிப் பண்டிகையில் அதற்கான அறிவிப்பை எரிக்கும் போராட்டத்தை நடத்தியுள்ளது.   இது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா தனியாக பிரிக்கப்பட்டதால்  தலைநகரம் ஹைதராபாத் தெலுங்கானா விற்கு சொந்தமானது .   எனவே ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதையடுத்து புதிய தலைநகரை அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது அமராவதியை ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமைக்கும் வேலையில்  அப்போதைய முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு தீவிரமாக மேற்கொண்டு வந்தார். 

ஆனால் திடீரென்று ஏற்பட்ட ஆட்சி  மாற்றத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார் திருமலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அறிவித்ததை மாற்றி ஆந்திராவுக்கு மொத்தம் மூன்று தலை நகரங்கள் உருவாக்கப்படும் என ஜெகன்மோகன் அறிவித்தார். மூன்று தலைநகர் என்பது முட்டாள்தனமானது என்றும் அது நிர்வாகத்தை சீர்குலைத்து விடும் என்றும் தெலுங்கு தேசம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது .  இந்த அறிவிப்பைக் ஜெகன்மோகன் கைவிட வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார் .  இந்நிலையில் விஜயவாடாவில் இன்று அதிகாலை போகிப்பண்டிகையில்   அரசின் அறிவிப்பை எரிக்கும் போராட்டத்தை  சந்திரபாபுநாயுடு நடத்தினர்.  இதில் ஏராளமான தெலுங்குதேசம் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .  சந்திரபாபு நாயுடு பேசும்போது மூன்று தலைநகர் திட்டத்தை ஜெகன்மோகன் கைவிடவேண்டும் இல்லையென்றால் இந்த அரசை கலைத்துவிட்டு மக்களை சந்தித்து மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்றார். 

  

மக்கள் ஜெகன்மோகன் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் ,  அமராவதி வேண்டாம் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸார் கூறுகின்றனர் ஆனால்  அமராவதி அமைய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாக உள்ளது  . விசாகப்பட்டினம் வளர்ச்சி பெற வேண்டுமென்றால் அங்கு தலைநகரம் வைத்தால் வளர்ச்சி பெறாது வட ஆந்திராவுக்கு தண்ணீர் கொண்டு சென்றால்  அந்த பகுதிகள் வளர்ச்சி பெறும் .  தலைநகர் விவகாரத்தில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது நிலையில் அமைச்சர்கள் ஒருவர் கூட இல்லை , அவர்கள்  கோழி சண்டை ,  மாட்டு வண்டி ஓட்டுவதில் , பொழுதை கழித்து வருகின்றனர் என்ற சந்திரபாபு நாயுடு ,  அமராவதி போராட்டத்திற்கு போலீசார் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

click me!