ஜெ., உங்களுக்கு பாட்டி... எம்.ஜி.ஆர்., தாத்தா... மாணவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..!

Published : Jan 14, 2020, 06:09 PM IST
ஜெ., உங்களுக்கு பாட்டி... எம்.ஜி.ஆர்., தாத்தா... மாணவர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி..!

சுருக்கம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி முறை, எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை, என அம்மா விளையாட்டு திட்டம் தொடக்கவிழாவில் மாணவர்களிடையே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு பாட்டி முறை, எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை, என அம்மா விளையாட்டு திட்டம் தொடக்கவிழாவில் மாணவர்களிடையே வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்குட்பட்ட என்.ஜி.ஓ., காலனியில் அம்மா இளைஞர் விளையாட்டுத்திட்டத்தின் கீழ் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் விளையாட்டு உபகரணங்கள், சீருடைகள், சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கி பேசியதாவது: அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் தொடங்கிவைக்கப்படுகிறது.

கிராமப்புற இளைஞர்கள், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த திட்டம் இது. நீங்கள் ஜெயலலிதாவை பார்த்திருப்பீர்கள். அவர்கள் உங்களுக்கு பாட்டி முறை. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களுக்கு தாத்தா முறை. நல்லபெயரை வாங்கவேண்டும் பிள்ளைகளே என அவர் பாடியுள்ளார். இதை பின்பற்றி நீங்கள் நல்லபெயரை வாங்கவேண்டும்.

அரசு விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என்றார்.

PREV
click me!

Recommended Stories

TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!
Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!