அரசியலில் பரபரப்பு... இனி எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தும் கிடையாதா..?? முதலமைச்சர் போட்ட பலே பிளான்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 4, 2020, 4:46 PM IST
Highlights

முதலமைச்சர் பதவியை இழந்த சந்திரபாபுநாயுடு விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கப் போகிறார் என அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . 

முதலமைச்சர் பதவியை இழந்த சந்திரபாபுநாயுடு விரைவில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்கப் போகிறார் என அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது ஆந்திர மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  ஆந்திர மாநில சாலை மற்றும் கட்டிடங்கள் விவகாரத்துறை  அமைச்சர் கிருஷ்ணதாஸ் தான் இவ்வாறு கூறியுள்ளார் .  தேர்தலுக்கு முன்பும் சரி தேர்தலுக்கு பின்பும் சரி,  ஆந்திர அரசியலில் எப்போதும் இல்லாத அளவிற்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு மிகுந்த பின்னடைவை சந்தித்து வருகிறார்.  ஆனால் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே  ஆட்சியை பிடித்துள்ளார் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்  தலைவர்   ஜெகன்மோகன் ரெட்டி,

 

இந்நிலையில் ஆந்திரா சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆட்சி நடத்தும் ஜெகன்மோகன் மற்றும்  எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே  விவாதங்களும் மோதல்களும் கடுமையாக  நடந்து வருகிறது .  ஒருவரை மாற்றி ஒருவர் கடுமையாக விமர்சித்து கொள்வது ஆந்திர  அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்துள்ளது .  இந்நிலையில் குண்டூர் மேற்குப் பகுதியைச் சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்எல்ஏ  தாரா ராம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்ததை அடுத்து அமைச்சர்  கிருஷ்ணதாஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார் , ஆந்திர அரசியலில் நடக்கும் அதிரடி நிகழ்வுகளை பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட சந்திரபாபு நாயுடுவுக்கு மிஞ்சாது என்ற நிலைதான்  ஏற்பட்டுள்ளது.   

அதற்கு காரணம் அவரது சொந்தக் கட்சி எம்எல்ஏக்கள்  அவருக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர் என்பதுதான்.  சுமார் 175  இடங்கள் கொண்ட சட்டமன்ற தேர்தலில் வெறும் 23 இடங்களை மட்டுமே தெலுங்குதேசம் கட்சி கைப்பற்றியது . ஒரு சபையில் உள்ள  உறுப்பினர்களில் குறைந்தது 10 சதவீதம் பேர் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் மட்டுமே ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும் என்பது விதி 

அந்த வகையில் தற்போது சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சியாக தலைவராக நீடிக்க 18 எம்எல்ஏக்கள் தேவை இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 6 சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை 6 எம்எல்ஏக்கள் ஜெகன் மோகன் ரெட்டி பக்கம் சென்று விட்டால் சந்திரபாபு நாயுடு எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்தை இழப்பது உறுதி என்கின்றனர்.  கடந்த 2003ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் நடத்திய கொலை முயற்சியில் இருந்து தப்பித்தவர் சந்திரபாபு ,  இதனால் அவருக்கு தேசிய பாதுகாப்பு காவல் வழங்கப்பட்டது,  ஒருவேலை  எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை அவர் இழக்கும் பட்சத்தில் அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் பறிபோகும்  நிலையே ஏற்படும் . 
 

click me!