போன் நம்பரை போட்டு வி.சி.க.,வினரை அழைக்கச் சொல்லும் நடிகை காயத்ரி ரகுராம்..!

Published : Jan 04, 2020, 04:16 PM IST
போன் நம்பரை போட்டு வி.சி.க.,வினரை அழைக்கச் சொல்லும் நடிகை காயத்ரி ரகுராம்..!

சுருக்கம்

பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் போன் நம்பர் கொடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை அழைக்கச் சொல்லி இருக்கிறார்.   

குவி மாடமாக இருந்தால் மசூதி என்றும் கூம்பு போல இருந்தால் கிறிஸ்தவ தேவாலயம் என்றும் அசிங்கமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கட்டடம் என்று தொல்.திருமாவளவன் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து திருமாவளவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, விசிக மகளிர் மாநாட்டில் நான் ஆற்றிய உரையில், ஒருசில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் உள்நோக்கம் இல்லை; உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும், அதற்காக நான் வருந்துகிறேன் என தெரிவித்தார்.

 
 
இந்நிலையில் நடிகையும், நட இயக்குனரனும், பாஜக ஆதரவாளருமான காயத்ரி ரகுராம் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் திருமாவளவனை விமர்சித்து பல டிவிட்டுகளை பதிவிட்டு வந்தார். ’இந்துக்கள் அனைவரும் திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள். திருமாவளவன் வருத்தம் தெரிவித்த போது கண்ணுல கிளசின் போடுங்க... நடிப்பு பத்தல’எனவும் கமெண்ட் செய்தார். பல சர்ச்சை கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். இதனால் விடுதலை சிறுத்தை கட்சியினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது காயத்ரி ரகுராமை தொலைபேசியில் அழைத்து விசிகவினர் தொல்லை கொடுத்தனர். 

 

அதனை மனதில் வைத்துக் கொண்டு தற்போது காயத்ரி ரகுராம் விசிகவினரை கோர்த்து விட்டுள்ளார்.  அதாவது குடியுரிமை சட்டத்திருத்தத்தை ஆதரிக்க மிஸ்டு கால் கொடுக்கச் சொல்லி பாஜக 8866288662 என்கிற எண்ணை அறிவித்துள்ளது. அந்த என்னை தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு விசிகவினருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது விசிகவினர் எந்த நம்பர் என ஆராயமல் போன் போட்டு விடுவார்கள் என்கிற அர்த்தத்தில்  காயத்ரி ரகுராம் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?