பாகிஸ்தானை போல இந்தியாவில் துன்புறுத்துவதில்லை... ஆதாரம் காட்டும் ராஜிவ் சந்திரசேகர் எம்.பி..!

By Asianet TamilFirst Published Jan 4, 2020, 3:07 PM IST
Highlights

20 ஆம் நூற்றாண்டில், பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை  வழங்கப்பட்டது. அப்போது தான் டாக்டர் மன்மோகன் சிங் இந்திய குடிமகனானார். 

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை பற்றி சரியான புரிதல் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற எம்.பி ராஜிவ் சந்திரசேகர் ஆணித்தரமான கருத்தை முன்வைத்து உள்ளார். 

அதில், இந்த சட்டம் பிரிவினைவாதத்தால் ஏற்படும் விளைவுகளை கையாள்வதில் ஒரு பகுதி மட்டுமே. 1950 - களின் முற்பகுதியில் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் நிலைமை குறித்து "நேரு-லியாகத் ஒப்பந்தம்" மூலம் வரையறை செய்யப்பட்டது. அப்போது பாகிஸ்தானின் அரசியலமைப்பு அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து முழு விவரத்தை தெரிந்துகொள்ள பாகிஸ்தான் பற்றிய ஜாஃப்ரெலட் புத்தகத்திலிருந்து (Jaffrelot book on Pakistan) பெறலாம். 

 

உதாரணத்திற்கு, 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஆசியா பிபி என்ற கிறிஸ்துவ பெண், ஒரு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து அருகே இருந்த சக பண்ணை நிலங்களுக்கு வழங்கினார். அப்போது முஸ்லீம் பெண்கள் அவர் ஒரு முஸ்லீம் அல்லாதவர் எனக்கூறி, அந்த தண்ணீரை குடிக்கவும் மறுத்துவிட்டார்கள், அந்த தருணத்தில் நபிகள் நாயகத்தைப் பற்றி விமர்சனம் செய்ததாக ஆசியா பிபி மீது குற்றம் சாட்டப்பபட்டு 2010-ல் தண்டனை வழங்கிய பின்னர், அவரை மன்னித்து கருத்து வெளியிட்டதற்காக பாகிஸ்தான் அரசியல்வாதி சல்மான் தசீரை 2011 ஜனவரி 4 ஆம் தேதி கொல்லப்பட்டார். சிறுபான்மையினருக்கு இப்படி ஒரு துன்புறுத்தல் இருந்தது நிரூபணமாக இதைவிட வேறு சான்று தேவைப்படாது.  

20 ஆம் நூற்றாண்டில், பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியா வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. அப்போது தான் டாக்டர் மன்மோகன் சிங் இந்திய குடிமகனானார். அந்த ஒரு காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்கள் பற்றியோ அல்லது இந்தியாவில் உள்ள இந்துக்கள் பற்றியோ "நேரு-லியாகத்" ஒப்பந்தத்தில் குறிப்பிடவில்லை. 

அப்படி இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் எந்தவொரு சமூகத்திலிருந்தும் அகதிகளாக வந்தவர்கள் இந்திய குடிமக்களாகும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளோம். அதற்கு தேவையான சிறப்பு வழிமுறைகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் மதத்தின் அடிப்படையில் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு.

அவ்வளவு ஏன், தற்போது கூட பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் சிறுபான்மையினரை இன்றளவும் துன்புறுத்துவது தொடர்ச்சியான உண்மை என நிரூபணமாகிறது.

கட்டுரையாளர்: ராஜிவ் சந்திரசேகர், எம்.பி., இந்திய பாராளுமன்றம்.

 

click me!