ஒலிம்பிக்கில் போராடித் தோற்ற அனைவருக்கும் அல்ட்ராஸ் கார்..! இதுதாண்டா நம்ம டாட்டா..!

Published : Aug 16, 2021, 10:17 AM IST
ஒலிம்பிக்கில் போராடித் தோற்ற அனைவருக்கும் அல்ட்ராஸ் கார்..! இதுதாண்டா நம்ம டாட்டா..!

சுருக்கம்

டோக்கியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பத்தக்கத்தைத் தவறவிட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு நன்றி உணர்வைத் தெரிவிக்கும் விதமாக, டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் காரை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், நூலிழையில் வெண்கல பதக்கத்தை தவற விட்ட இந்திய விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் அல்ட்ராஸ் கார் பரிசாக வழங்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது அதிரடியாக அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் 32 ஆவது போட்டி தற்போது நடந்து முடிந்துள்ளது. இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கு கொண்டு 7 பேர் பதக்கங்களையும் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்தனர். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரொக்க பணம்,  கார், அரசு வேலை என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டு குவிந்து வருகிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "டோக்கியோ ஒலிம்பிக்கில் நூலிழையில் பத்தக்கத்தைத் தவறவிட்ட வீரர்கள், வீராங்கனைகளுக்கு நன்றி உணர்வைத் தெரிவிக்கும் விதமாக, டாடா மோட்டார்ஸ் அல்ட்ரோஸ் காரை பரிசாக வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறது. அவர்கள் பதக்கத்தை வெல்லாமல் இருந்திருக்கலாம் ஆனால் அவர்கள் கோடிக்கணக்கானோரின் இதயங்களை வென்றுவிட்டார்கள். பலருக்கு ஊக்கமளித்துள்ளார்கள். எங்களின் அறிவிப்பு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வீரர்கள் வெற்றி பெற ஊக்கமளிக்கும் என நம்புகிறோம்’’ என டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!