2024 தேர்தலில் 450 தொகுதிகள் நமக்குதான்... அடுத்தும் மோடி ஆட்சிதான்.. அண்ணாமலை தாறுமாறு கணிப்பு..!

Published : Aug 15, 2021, 09:42 PM ISTUpdated : Aug 15, 2021, 09:43 PM IST
2024 தேர்தலில் 450 தொகுதிகள் நமக்குதான்... அடுத்தும் மோடி ஆட்சிதான்.. அண்ணாமலை தாறுமாறு கணிப்பு..!

சுருக்கம்

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 450 இடங்களில் வெற்றிப்பெறும். பிரதமராக மீண்டும் மோடியே பொறுப்பேற்பார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.  

வேலூரில் பாஜக செயல் வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு கொண்டுவந்த எல்லா திட்டங்களுமே சிறப்பானதாகும். இத்திட்டங்களை கேலி பேசி வந்த திமுக, தற்போது அதையே சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ளது. அன்று கறுப்புக்கொடி காட்டினார்கள். ‘கோ பேக்’ மோடி என முழுக்கமிட்டவர்கள் இன்று பாஜக கொண்டுவந்தது நல்ல திட்டங்கள் என்றும், அதனால் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளதாக தமிழக தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 450 இடங்களில் வெற்றிப்பெறும். பிரதமராக மீண்டும் மோடியே பொறுப்பேற்பார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாக்கப்படும். காங்கிரஸ் கட்சியில் 23 தலைவர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியில் செயல் தலைவர்கள் மட்டுமே உள்ளனர். காங்கிரஸ் கட்சி தேர்தல் நடத்திய பல ஆண்டுகள் ஆகிவிட்டன. செயல் தலைவரை வைத்தே கட்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட வேண்டும் என்று மகாத்மா காந்தி எனக்கூறினார். அவரது கனவை தற்போது அக்கட்சி நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே குழப்பமுள்ள கட்சி என்றால், அது காங்கிரஸ் கட்சிதான்." என்று அண்ணாமலை பேசினார்.
 

PREV
click me!

Recommended Stories

திரும்பத் திரும்ப அவமானம்..! பாஜக சவகாசமே வேண்டாம்..! ஓ.பி.எஸ் எடுத்த அதிரடி முடிவு..!
உங்கள் மிரட்டலுக்கு திமுக தலைமை அல்ல... தொண்டன் கூட பயப்பட மாட்டான்..! துணைக்கு கூட்டம் சேர்க்கும் உதயநிதி