#BREAKING 6 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குதா? நம்ப முடியாதவர்களும் நம்பித்தான் ஆக வேண்டும்.!

By vinoth kumarFirst Published Oct 28, 2021, 4:35 PM IST
Highlights

தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் டாஸ்மாக்கிற்கு ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழகத்தில் மது வகைகளை வர்த்தகம் செய்யும் அரசு நிறுவனம். இந்நிறுவனம் தமிழகத்தில் மதுபானங்களை மொத்த மற்றும் சில்லறை வர்த்தகம் செய்யும் உரிமைத்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் வருவாய் ஈட்டும் முக்கிய காரணியாக டாஸ்மாக் செயல்பட்டு வருகிறது. தற்போது, 5,425 டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. தினந்தோறும் சராசரியாக ரூ.100 கோடி மதிப்பிலான சரக்கு வகைகள் விற்பனையாவதாக கூறப்படுகிறது. அதேபோல், பண்டிகை காலங்களான தீபாவளி, பொங்கல் வார விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம்.

இதையும் படிங்க;- மதுரையில் அதிகாலை நடந்த பயங்கரம்.. ஏசியில் மின்கசிவு.. தூங்கிக் கொண்டிருந்த தம்பதி தீயில் கருகி உயிரிழப்பு..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் சில காலம் மூடப்பட்டதால் தமிழக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க;- பாத்ரூமில் ஆனந்த குளியல் போட்ட இளம்பெண்.. பக்கத்து வீட்டு பையன் என்ன செஞ்ச தெரியுமா?

பழனியைச் சேர்ந்த சிவஞானம் என்பவர் 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை டாஸ்மாக் நஷ்டத்தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அவருக்கு தமிழ்நாடு வாணிப கழகம் ஆண்டுவாரியான நஷ்டத்தைக் குறிப்பிட்டு தகவல் அனுப்பியிருக்கிறது. அதன்படி, 2010-11ல் ரூ.3.56 கோடி, 2011-12ல் ரூ.1.25 கோடி, 2012-13ல் ரூ.103.64 கோடி, 2013-14ல் ரூ.64.44 கோடி, 2015-16ம் ஆண்டில் ரூ.67.61 கோடி, 2019-20 நிதியாண்டில் ரூ.71.93 கோடிக்கு டாஸ்மாக்கில் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக பதிலளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2020-21 நிதியாண்டில் ஏற்பட்டிருக்கும் நஷ்டங்கள் குறித்த கணக்கு தொகுக்கப்படுவதாகவும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

click me!