அந்த அமைச்சர் மீது வழக்கு தொடருங்கள்... அரசியலாக விஸ்வரூபம் எடுக்கும் ஷாருக்கான் மகன் போதைப்பொருள் வழக்கு..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2021, 4:12 PM IST
Highlights

ஒரு மராத்தியாக, நான் நீதியின் நம்பிக்கையுடன் உங்களைப் பார்க்கிறேன். நான் உங்களிடம் நியாயம் கேட்கிறேன்

சமீர் வான்கடேவின் சகோதரி, வழக்கறிஞர் யாஸ்மீன், இன்று மும்பை காவல்துறையை அணுகி, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். 

போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி, சமீர் வான்கடேவின் மனைவி கிராந்தி வான்கடே, தனது கணவருக்கு நீதி கேட்டு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் முதலமைச்சரை சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டுள்ளார்.

கிராந்தி வான்கடே தாக்கரேவுக்கு எழுதிய கடிதத்தில், ‘’ஒட்டுமொத்த குடும்பமும் அவமானத்தை எதிர்கொள்கிறது. நாங்கள் ஒவ்வொரு நாளும் மக்கள் முன் அவமதிக்கப்படுகிறோம். சத்ரபதி சிவாஜி மகாராஜ் மாநிலத்தில் ஒரு பெண்ணின் கண்ணியம் விளையாடப்படுகிறது. இன்று பாலாசாகேப் இங்கே இருந்திருந்தால், அவர் அதை விரும்பியிருக்க மாட்டார்.

பாலாசாஹேப் இன்று இங்கு இல்லை, ஆனால் நீங்கள் இருக்கிறீர்கள். நாங்கள் அவரை உங்களில் காண்கிறோம், நாங்கள் உங்களை நம்புகிறோம். என் குடும்பத்திற்கும், எனக்கும் அநீதி இழைக்க நீங்கள் அனுமதிக்க மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு மராத்தியாக, நான் நீதியின் நம்பிக்கையுடன் உங்களைப் பார்க்கிறேன். நான் உங்களிடம் நியாயம் கேட்கிறேன், ”என்று அவர் தெரிவித்துள்ளார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’மகாராஷ்டிர முதலமைச்சரிடம் சந்திப்புக்காக நேரம் கேட்டுள்ளேன். எனக்கு இதுவரை பதில் வரவில்லை, பதிலுக்காக காத்திருக்கிறேன்’’ என்று அவர் தெரிவித்தார். 

NCB இன் மும்பை மண்டல அதிகாரி சமீர் வான்கடே, அக்டோபர் 2 ஆம் தேதி ஒரு பயணக் கப்பலில் சோதனையை மேற்கொண்டார், அப்போது நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கைது செய்யப்பட்டார். சோதனைக்குப் பிறகு, 13 கிராம் கோகோயின், 5 கிராம் மெபெட்ரோன், 21 கிராம் சரஸ், 22 எம்.டி.எம்.ஏ (எக்டஸி) மாத்திரைகள் மற்றும் 1.33 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கோர்டெலியாவில் இருந்து மீட்கப்பட்டதாக வான்கடே கூறினார்.

ஆனால் ரெய்டு மற்றும் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டதில் இருந்து இந்த வழக்கு பல நிலைகளில் விறுவிறுப்பு அடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக், என்சிபி அதிகாரி மீது அவரது தனிப்பட்ட வாழ்க்கை உட்பட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

இதையும் படியுங்கள்:-இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்... அடித்துச் சொல்லும் பிரஷாந்த் கிஷோர்..!

"சமீர் வேலை செய்வதை அவர்கள் விரும்பவில்லை, அது போதைப்பொருளில் இருந்து அவர்களின் தினசரி வருமானத்தைத் தடுக்கிறது. அதனால்தான் அவரை அகற்ற வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்று வான்கடேவின் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும் தங்களது குடும்பத்திற்கு "அச்சுறுத்தல் அழைப்புகள்" வருவதாக கூறினர்.

இதையும் படியுங்கள்:- பாகிஸ்தானுக்கு ஆதரவாக கொண்டாட்டம்... ஒருத்தரைக்கூட விடாமல் தூக்கும் காவல்துறை..!

சமீர் வான்கடேவின் சகோதரியும், வழக்கறிஞருமான யாஸ்மீன், இன்று மும்பை காவல்துறையை அணுகி, தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர அமைச்சருமான நவாப் மாலிக் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யக் கோரி எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை எப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை. ஷாருக்கான் மகன் ஆர்யன் கானின் வழக்கு இன்னும் பல்வேறு கட்டங்களை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

click me!