இந்தியாவில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சிதான்... அடித்துச் சொல்லும் பிரஷாந்த் கிஷோர்..!

By Thiraviaraj RMFirst Published Oct 28, 2021, 3:41 PM IST
Highlights

மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற நினைப்பின் வலையில் ஒருபோதும் சிக்காதீர்கள்.

மோடியை மக்கள் தூக்கி எறிந்தாலும், இந்திய அரசியலில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பாஜகதான் மையமாக இருக்கும் அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோர் அடித்துக் கூறியுள்ளார். 

கோவாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,  “வெற்றி பெற்றாலும், தோற்றாலும், இந்திய அரசியலின் மையமாக பாஜக இருக்கும். காங்கிரஸ் 40 ஆண்டுகளாக இருந்ததை போல பாஜக வலுவாக இருக்கும். பாஜக எங்கும் செல்லவில்லை. இந்தியாவில் 30 சதவீத வாக்குகளைப் பெற்றுவிட்டாலே, அவசரப்பட்டு எங்கும் செல்லமாட்டீர்கள். எனவே மக்கள் கோபமடைந்து மோடியைத் தூக்கி எறிவார்கள் என்ற நினைப்பின் வலையில் ஒருபோதும் சிக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:- எடப்பாடியை கட்சியில் இருந்து நீக்குங்கள்... சசிகலா விஷயத்தில் ஏமாற்றினால்... ஓ.பி.எஸுக்கு கடும் நெருக்கடி..!

எனவே, மக்கள் கோபமடைந்து மோடியை தூக்கி எறிவார்கள் என்ற நினைப்பில் ஒருபோதும் சிக்க வேண்டாம். ஒருவேளை அவர்கள் மோடியை தூக்கி எறிந்தாலும்,பாஜக எங்கும் செல்லாது. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் பாஜகவை எதிர்த்துப் போராட வேண்டும்." பிரசாந்த் கிஷோர் கூறினார்.

வரவிருக்கும் 10 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஒரு சக்தியாக இருக்கும் என்று கணித்த பிரசாந்த் கிஷோர், "நரேந்திர மோடியை மக்கள் தூக்கி எறிவார்கள்" என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைப்பது தவறு என்று கூறியுள்ளார். "ராகுல் காந்திக்கு அங்குதான் பிரச்சனை இருக்கிறது. ஒருவேளை, மக்கள் அவரை (நரேந்திர மோடியை) தூக்கி எறிவார்கள் என்று அவர் நினைக்கிறாரோ? அது நடக்காது.

மோடியின் பலத்தை நீங்கள் ஆராய்ந்து, புரிந்து கொள்ளாத வரை, அவரைத் தோற்கடிக்க உங்களால் ஒருபோதும் முடியாது. நான் பார்க்கும் பிரச்சனை என்னவென்றால், பெரும்பாலான மக்கள் அவரது பலத்தைப் புரிந்துகொள்வதற்கும், அவரைப் பிரபலமாக்குவதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் போதுமான நேரத்தை செலவிடுவதில்லை. உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே, நீங்கள் மோதலை கடைபிடிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:-சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸை தூண்டுவதே எடப்பாடியார்தான்... அதிமுகவுக்குள் நடக்கும் கும்மாங்குத்து..!

உதாரணமாக மோடி அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. மக்கள் மத்தியில் மோடிக்கு எதிராக ஏதேனும் எதிர்ப்பு எழுந்துள்ளதா? இல்லைதானே. தேர்தலைப் பொறுத்தவரை நாட்டில் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால் போதும். ஆதரவளித்தால் போதுமானது. மற்ற இரு பங்கு மக்கள் 10 முதல் 15 கட்சிகளுக்குத்தான் பிரித்து வாக்களித்திருப்பார்கள். ஆதலால், மோடிக்கு எதிராகவோ, பாஜகவுக்கு எதிராகவோ எந்த ஸ்திரமான கூட்டணியும் அணியும் உருவாகாது. 10 முதல் 15 கட்சிகளாகப் பிரிந்து வாக்கு பிரிவதற்குக் காரணமே காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சிதான்.

இதையும் படியுங்கள்:-எச்சில் சோறு தின்ற எடுபுடிக்கே இத்தனைக் கோடி என்றால் எடப்பாடிக்கு எத்தனைக் கோடியோ?- நாஞ்சில் சம்பத்..!

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு சரியும்போது, 65 சதவீத சிறிய கட்சிகள் துண்டு துண்டாகச் சிதறி சிறிய கட்சிகளாகவும், தனிநபர்களைச் சார்ந்த கட்சிகளாகவும் மாறின’’ என அவர் தெரிவித்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியிலும், தமிழகத்தில் திமுகவின் வெற்றியிலும் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார்.

click me!