டாஸ்மாக் வருமானம் ரூ.500 கோடி.? ஊரடங்கில் கள்ளத்தனமாக கள்ளாக்கட்டிய தமிழக அரசு.. அதிர்ச்சியில் குடிமகன்கள்.!

By vinoth kumarFirst Published Apr 30, 2020, 6:47 PM IST
Highlights

ஊரடங்கு நேரத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக ரூ.500 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக ரூ.500 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தைப் பொறுத்தவரை ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கின்றன. அத்தியாவசிய தேவையற்ற சேவைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசே ஏற்று நடத்தும் அதன் முக்கிய வருவாய் காரணியான 5300 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், பல்வேறு இடங்களில் மதுபானம் கிடைக்காத விரக்தியில் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது, டாஸ்மாக் கடைகளில் திருடுவது உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்தன. மேலும், கள்ளச்சாரயம் காய்ச்சுவதும் சம்பவங்களும் அதிகரித்து வந்தன. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கள்ளத்தனமாக ரூ.500 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளத்தனமாக விற்பனை செய்த பணத்தை வங்ககளில் கட்டாமல் ஊழியர்கள்  கையில் வைத்திருப்பதாகவும், பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்த ஊழியர்களை அதிகாரிகள் வலியுறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. கடை திறந்ததும் விற்பனையானது போன்று கணக்குக்காட்ட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், கள்ளச்சந்தை விற்பனையின் மூலம் ஏராளமான கடைகளில் இருப்பு தீர்ந்து விட்டதாகவும், அந்தக் கடைகளில் மாவட்ட ஆட்சியர் சோதனை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, சரக்கு இல்லாமல் நாங்கள் அவதிப்பட்டு வரும் போது, ரூ.500 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் குடிமகன்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

click me!