’தப்பான இடத்தில் இருந்தாலும் நல்லது செய்யுறீங்க...’ திமுக எம்.எல்.ஏ.,வை வாழ்த்திய எஸ்.வி.சேகர்..!

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2020, 5:09 PM IST
Highlights

நீங்கள் தப்பான இடத்திலும், தவறான ஆட்களுடனும் உள்ளீர்கள்! திமுக செய்யும் உதவி அனைத்துமே சொந்த காசில் தான் செய்கிறது. வாருங்கள் திமுகவிற்கு

தப்பான இடத்துல இருந்தாலும் சொந்த காசுல நல்லது செய்யுற கும்பகோணம் எம்.எல்.ஏ.,அன்பழகனுக்கு வாழ்த்துகள் எனக்கூறியுள்ளார் எஸ்.வி.சேகர். விபத்தில் சிக்கி 10 ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த கூலித்தொழிலாளி  ஒருவருக்கு திமுக எம்.எல்.ஏ மூலம் உதவிகள் கிடைத்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம் அடுத்து புளியஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் விபத்து ஒன்றில் அவரது இடுப்புக்கு கீழ் உறுப்புகள் செயலிழந்து 10 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருக்கிறார்.

அவரது மனைவி கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவர்களுக்கு பதிமூன்று வயதில் மகன் உள்ளார். ஊரடங்கு உத்தரவால் வேலைக்குச் செல்ல முடியாமல் தவித்து சிரமப்பட்டார் சாந்தி. இதை எடுத்து திமுகவில் அறிவிக்கப்பட்ட ஒன்றிணைவோம் வா என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இந்த விபரங்கள் கும்பகோணம் எம்எல்ஏ அன்பழகனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சக்திவேலை வீட்டிற்கு சென்ற திமுக எம்.எல்.ஏ அழ்பழகன், 20 நாட்களுக்கு தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்கள் 2000 ரூபாய் வழங்கினார்.

அப்போது சாந்தி கடன் கொஞ்சம் இருக்கிறது. அதை தீர்க்க கறவை மாடு வைத்திருந்தால் அதில் வருமானத்தில் கடனை அடைப்பேன் என கூறியுள்ளார். ஊரடங்கு முழுமையாக நீங்கிய பின் கறவை மாடு வாங்கி தருகிறேன். விஜய் படிப்பு செலவையும் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன் என திமுக எம்எல்ஏ அன்பழகன் கூறிச்சென்றுள்ளார். 

தப்பான இடத்துல இருந்தாலும் சொந்த காசுல நல்லது செய்யுற கும்பகோணம் எம் எல் ஏ அன்பழகனுக்கு வாழ்த்துக்கள். pic.twitter.com/Ax5GV1xfwO

— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER)

 

இந்தச் செய்தியை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், '’தப்பான இடத்துல இருந்தாலும் சொந்த காசுல நல்லது செய்யுற கும்பகோணம் எம் எல் ஏ அன்பழகனுக்கு வாழ்த்துக்கள்’’எனத் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலடி கொடுத்துள்ள திமுக தொண்டர் ஒருவர், ‘’நீங்கள் தப்பான இடத்திலும், தவறான ஆட்களுடனும் உள்ளீர்கள்! திமுக செய்யும் உதவி அனைத்துமே சொந்த காசில் தான் செய்கிறது. வாருங்கள் திமுகவிற்கு! ஒன்றிணைவோம் வா! வாருங்கள்’’என அழைப்பு விடுத்துள்ளார். 

click me!