அட்ராசக்க... கண்ணி வைத்து காத்திருக்கும் தமிழகம்... மோடிக்கு முன்பே முந்திக்கொண்ட எடப்பாடி பழனிசாமி..!

By Thiraviaraj RMFirst Published Apr 30, 2020, 3:25 PM IST
Highlights

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
 

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை தமிழகத்திற்கு ஈர்க்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றஞ்சாட்டி வருகிறது. தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவையாக இருப்பினும் தற்போது அமெரிக்காவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ? என்ற எண்ணம் பிற நாடுகளுக்கும் எழ ஆரம்பித்து இருக்கிறது. உலக நாடுகள் கொரோனாவால் நிலைகுலைந்து போய் கிடக்க, முதலில் கொரோனா தோன்றிய சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

அங்கு பலி எண்ணிக்கை வெறும் 4 ஆயிரம் என்றளவில் இருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த நாடுகள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த பின்னடைவை சந்தித்து வருகின்றன. மறுபுறம் மாஸ்க், கிளவுஸ், வெண்டிலேட்டர் என ஏராளமான பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீனா பெருத்த லாபம் ஈட்டி வருகிறது. 

இந்நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பிற நாட்டு நிறுவனங்களில் சீனா அதிக முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் ஆடிப்போன பல உலக நாடுகள் தங்களது நாட்டில் அந்நிய முதலீடுகளுக்கான விதிகளை கடுமையாக்கி வருகின்றன. இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களை சீனாவிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தங்களது நாட்டில் உள்ள விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கின்றன.

அந்தப் பட்டியலில் சமீபமாக இந்தியாவும் இணைந்துள்ளது. அதன்படி இந்தியாவுடன் எல்லையை பகிரும் எந்த நாடாக இருந்தாலும், இனி மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின்தான் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும் என்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களை சீனா வாங்குவதை, முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இதைப்பார்த்த சீனா உலக வர்த்தக மையம் விதித்து இருக்கும் விதிகளுக்கு இது எதிரானது என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக இருப்பதால் உலக நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவை துண்டித்துக் கொண்டால், அது இந்தியாவுக்கு பொருளாதாரரீதியாக மிகுந்த பயனளிக்கும்.  இதனை பயன்படுத்திக் கொள்ள தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக தலைமை செயலாளர் தலைமையில் சிறப்பு குழு ஒன்றை முதல் அமைச்சர் பழனிசாமி அமைத்துள்ளார்.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர் மற்றும் தைவான் ஆகிய வெளிநாடுகளில் இருந்து இடம்பெயரும் நிறுவனங்களை இந்த குழு கண்டறியும்.  பின்பு விரைவான அனுமதி, சிறப்பு சலுகைகள் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.  ஒரு மாதத்திற்குள் இந்த குழு முதல் அமைச்சருக்கு அறிக்கை அளிக்கும் என அவர் கூறியுள்ளார். இதனால் தமிழகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் களம் பதிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களை என மோடி காத்திருந்தாலும் எடப்பாடி பழனிசாமி அவரை முந்திக்கொண்டு ஒரு குழுவையே அமைத்துக் கொண்டு முந்தியுள்ளார்.


 

click me!