டாஸ்மாக் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் திமுக... ஸ்டாலின் முகத்திரையை கிழிக்கும் எல்.முருகன்..!

By vinoth kumarFirst Published Jun 13, 2021, 3:08 PM IST
Highlights

டாஸ்மாக் விவகாரத்தில் ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை என முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

டாஸ்மாக் விவகாரத்தில் ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை என முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார் என பாஜக தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். 

கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்துள்ளதால், இங்கே தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகள் இங்கே திறக்கப்படவில்லை.

இந்நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு ராமதாஸ், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது. அதேபோல் தமிழகம் முழுவதும் பாஜகவினர் கருப்பு பட்டை அணிந்து டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன்;- டாஸ்மாக் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என விமர்சனம் செய்துள்ளார். ஆட்சியில் இல்லாதபோது ஒரு நிலை, ஆட்சிக்கு வந்தபின் ஒரு நிலை என முதல்வர் செயல்படுகிறார். தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல பெட்ரோல் விலையை குறைக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறக்க வேண்டிய அவசியம் என்ன? எனவும் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். 

click me!