டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் ! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !!

Published : Oct 03, 2019, 09:02 PM IST
டாஸ்மாக்  ஊழியர்களுக்கு தீபாவளிக்கு போனஸ் ! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு !!

சுருக்கம்

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் பணி புரியும் ஊழியர்களுக்கு அரசு 20 சதவீதம் போனஸ் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மதுக் கடைகளை அரசே ஏற்று நடத்தி வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை அரசாங்கமே டாஸ்மாக் கடைகளில் இருந்து வரும் வருவாயைக்  கொண்டு தான் நடைபெற்று வருகிறது.

அதே நேரத்தில் மாஸ்மாக் கடைகளில் தற்போது  நாளுக்கு நாள் விற்பனை அதிகரித்துகொண்டே வருகிறது. மேலும் குடிமக்கள் மற்றும் மதுபானக்கடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும் அங்கு பணியாற்றும் சூப்பர் வைசர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள் அனைவருக்கும் அரசாங்கமே சம்பளம் வழங்கி வருகிறது.இந்நிலையில், தீபாவளி பண்டிகை விரைவில் வரவுள்ளதை முன்னிட்டு தமிழக அரசு, டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20% போனஸ் அறிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மேற்பார்வையாளர்கள் , விற்பனையாளர்கள் உள்ளிட்டோருக்கு போனஸாக 16 ஆயிரத்து 800 ரூபாயும், உதவி விற்பனையாளர் மற்றும் பிற ஊழியர்களுக்கு போனஸாக 16 ஆயிரத்து 300 ரூபாயும் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!