விவாதத்திற்கு நான் தயார்... நீங்க தயாரா? முத்தரசனுக்கு சவால் விடுக்கும் தமிழிசை!!

Published : Apr 17, 2022, 03:49 PM IST
விவாதத்திற்கு நான் தயார்... நீங்க தயாரா? முத்தரசனுக்கு சவால் விடுக்கும் தமிழிசை!!

சுருக்கம்

ஆளுநரின் தனிப்பட்ட விருந்தை காங்கிரஸ், திமுக புறக்கணித்தது ஏன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆளுநரின் தனிப்பட்ட விருந்தை காங்கிரஸ், திமுக புறக்கணித்தது ஏன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் சித்திரை முழு நிலவில் கூடுவோம் தமிழ் புத்தாண்டை கொண்டாடுவோம் என்ற பெயரில் விருந்து அளிக்கும் நிகழ்வை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்வில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், என். ஆர். காங்கிரஸ் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் காங்கிரஸ்,திமுக, இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தனர். மேலும் இதில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பொய்க்கால் குதிரை, மயில் ஆட்டம், மல்லர் கம்பம், பரத நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உணவு வகைகளான குதிரைவாலி புட்டு, குதிரை வாலி பொங்கல், இளநீர் பாயசம். முடக்கத்தான் கீரை தோசை ஆகியவைகளை பாரம்பரிய உணவு வகைகளை விருந்தினர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த விழாவைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநரின் தனிப்பட்ட விருந்தை காங்கிரஸ், திமுக புறக்கணித்தது ஏன்? என்னுடைய அழைப்பை அரசியலாக நினைக்க வேண்டாம். இது தமிழ் பண்பாட்டிற்கு உகந்தது அல்ல. இது ஒரு தமிழ் விழா. அந்த விழாவிற்கு நான் அழைத்து உள்ளேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தான் நான் பயணித்து கொண்டிருக்கிறேன். காரணம் இல்லாமல் புறக்கணிக்க வேண்டாம். எல்லாத்தையும் அரசியலாக பார்த்து புறக்கணித்தால் யாரும் நல்லுறவுடன் இருக்க முடியாது. தமிழர் திருநாள் என்று தான் நான் அழைத்தேன்.

ஆளுநர் அழைப்பை அரசியலாக பார்க்க வேண்டாம். அப்படி பார்த்தால் எல்லாவற்றையும் அரசியலாக பார்க்க நேரிடும். முத்தரசன்க்கு புதுச்சேரி குறித்து என்ன தெரியும். அவர் தமிழகத்தில் உள்ளார். அவர் என்னை சூப்பர் முதல்வராக செயல்படுவதாக கூறி உள்ளார். ஆனால் நான் சூப்பராக செயல்படுகிறேன் என்பதை மட்டும் கூறி கொள்வேன். இதை பற்றி புதுச்சேரியில் உள்ள யாரிடம் கேட்டாலும் சொல்வார்கள். திறமையின் அடிப்படையில் தான் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்துள்ளனர். தமிழிசைக்கு நிர்வாக திறமை இல்லை என்று முத்தரசனை சொல்லச்சொல்லுங்கள் பார்ப்போம். என்ன திறமை இல்லை என்பது குறித்து நான் விவாதிக்க தயார். எந்த மாநிலத்திலும் பிரச்சினை இல்லாமல் செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!