
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மாநிலங்களவை எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘தீரன் சின்னமலையின் புகழ் போற்றும் வகையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவருடைய சிலையை நிறுவி திறந்து வைத்தார். சாதி மதத்திற்கு அப்பற்பாட்டவர் தீரன் சின்னமலை. தமிழ் புத்தாண்டில் அளிக்கப்பட்ட ஆளுநரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளதாது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் வேதனை அளிக்கும் செயல்.
தமிழைக் காக்க வேண்டும் என்று கூறும் திமுக, தேநீர் விருந்தில் பங்கேற்காதது ஏன்? ஆனால் தமிழ் கலச்சாரம் போற்றபடும் வகையில் தான் அதிமுக தேநீர் விருந்தில் கலந்து கொண்டது. 17 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்த திமுக கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அப்போதே திமுக நடவடிக்கை எடுத்திருந்தால் நீட் தேர்வு வந்திருக்காது என்றார்.