Tamilnadu rain:அடுத்த 4 நாட்களுக்கு வானிலையில் நடக்கபோகும் தலைகீழ் மாற்றம்.. ஒரு மாவட்டத்தில் மட்டும்..??

By Ezhilarasan BabuFirst Published Dec 18, 2021, 2:08 PM IST
Highlights

வெப்பநிலை எச்சரிக்கை:18.12.2021, 19.12.2021:  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். 

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் ஒட்டுமொத்த தமிழகமும் வெள்ளக்காடாக மாறியது. பல்வேறு மாவட்டங்களில் நீர்நிலைகள் நிரம்பியது, கடந்த ஒரு மாதத்தில் பெய்த மழையினால் மட்டும் சென்னை 3 முறை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழையின் தாக்கம் குறைந்து கடந்த ஓரிரு வாரங்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு கடல் பகுதியிலிருந்து எதிர்த்திசையில் இந்த தாழ்வு மண்டலம் இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அது கொண்டு வரும் என்றும் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ காற்றின் (Wind Convergence) காரணமாக  18.12.2021:  ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.19.12.2021 முதல் 22.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெப்பநிலை எச்சரிக்கை 18.12.2021, 19.12.2021:  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும். 20.12.2021 முதல் 22.12.2021:  உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும்.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) 3.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 18.12.2011 முதல் 20.12.2021 வரை: குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.12.2021. 19.12.2021: தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய  பூமத்திய ரேகை  பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

click me!