இனி சாலைக்கு வந்தால் ட்ரீட்மென்ட் தான்..!! ஊரடங்கை மீறுபவர்களுக்கு போலீஸ் கூறும் எச்சரிக்கை..!!

By Ezhilarasan BabuFirst Published Mar 26, 2020, 1:22 PM IST
Highlights

அதேபோல தமிழகம் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார். வர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக சுமார்  1100 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது . கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு தேசிய ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது .  இந்நிலையில் தமிழக அரசும் 144 தடை உத்தரவை அறிவித்து மக்கள் வீட்டுக்குள் அடங்க வேண்டும் என எச்சரித்துள்ளது .  இந்த அறிவிப்பு வெளியாகி இரண்டு நாட்களாகியும் பொதுமக்கள் முறையாக இதை பின்பற்றாத நிலை இருந்து வருகிறது.  அதேபோல தடை உத்தரவு அமலில்  இருந்தும் பொதுமக்கள் ஆங்காங்கே சாலைகளில் சுற்றித் திரிவதை பார்க்க முடிகிறது. 

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக போலீசார் பொதுமக்களை அரசுக்கும் காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரி வந்தனர் .   இந்நிலையில் ஊரடங்கு உத்தரவுகளை மீறுபவர்களின்  மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் எச்சரித்து வந்தனர்.  இந்நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை  மீறியதாக  சுமார் 1100 பேர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.  அதே போல் திருவாரூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த ஐந்து பேர் உத்தரவை மீறி வெளியில்  நடமாடியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதேபோல்  தடையை மீறி சாலைகளில் சுற்றித்திருந்தவர்களின்  வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேபோல தமிழகம் முழுவதும் தனிமைப் படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு பயணிகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார். வர்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.  அதேநேரத்தில் பொதுமக்களின் அத்தியாவசிய  பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் காய்கறி மார்க்கெட்டுகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்.  இதனால் ஊரடங்கு உத்தரவையும் முறையாக கடைபிடிக்க முடியாத நிலை காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது . இந்நிலையில்  எந்த அத்தியாவசிய காரணங்களும் இன்றி இருசக்கர வாகனங்களில்  சுற்றித் திரிந்தவர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி போது இடங்களில் உலாவந்தவர்களின் மீது போலீசார் விசாரணை நடத்தி அவர்கள் மீது  தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டம் ,  ஊரடங்கு அத்துமீறில் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் .
 

click me!