அமலுக்கு வருமா 7வது ஊதியக்குழு பரிந்துரை? - நாளை மறுநாள் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்...!

First Published Oct 9, 2017, 3:03 PM IST
Highlights
tamilnadu ministers meeting on oct 11 th


நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 

ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பகுதியினர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வழக்கு தொடருவும் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இதைதொடர்ந்து, 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த அறிக்கையை  நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்.

இந்நிலையில், நாளை மறுநாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இதில், பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 7 வது ஊதிய குழு பரிந்துரைகள் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மழைகால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்களுடன் விவாதிக்க உள்ளதாகவும் தெரிகிறது. ஒரு வார காலமாகவே அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தநிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது.  
 

click me!