
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்தது.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கார்த்திக் என்ற இளைஞரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவை நடராஜனுக்கு பொருத்தப்பட்டது. இந்த இளைஞர் மூளைச்சாவு அடைந்ததில் தொடங்கி அவரது உறுப்புகள் பெறப்பட்டது வரை பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டன.
இதையடுத்து இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் இதுதொடர்பாக பேசிய தினகரன், நடராஜனுக்கு செய்யப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்தினால் நடத்தட்டும் என தெரிவித்தார்.