தமிழகத்தில் நெம்பர் ஒன் பணக்காரர் சன் குழுமம் கலாநிதி மாறன்..!! எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா...??

Published : Feb 20, 2020, 02:08 PM IST
தமிழகத்தில் நெம்பர் ஒன் பணக்காரர் சன் குழுமம் கலாநிதி மாறன்..!! எத்தனை கோடிக்கு அதிபதி தெரியுமா...??

சுருக்கம்

தமிழக கோடீஸ்வரர்கள் பட்டியலில் சன் குழுமத்தின் தலைவர்  கலாநிதி மாறனுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . 

தமிழக கோடீஸ்வரர்கள் பட்டியலில் சன் குழுமத்தின் தலைவர்  கலாநிதி மாறனுக்கு முதலிடம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகளவில்  பணக்காரர்களின் பட்டியல் ,  இந்திய அளவில் பணக்காரர்களின் பட்டியல் என வெளியாக்கி வரும் நிலையில்,  தமிழக அளவில் யார் பணக்காரர் என்ற பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது .  தமிழகத்தில் சுமார் 1000 கோடிக்கு மேல் சொத்து மதிப்புடன் உள்ளவர்கள் பட்டியலை தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது ,

 

அதாவது ஹாருன் ரிப்போர்ட்ஸ் இந்தியா மற்றும்  ஐஐஃஎப்எல்  வெல்த் நிறுவனம் அந்த நிறுவனம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது , அதில்  சன் நெட்வொர்க்கின் உரிமையாளரும் சன் குழுமத்தின் தலைவருமான கலாநிதி மாறன் சுமார் 19 ஆயிரத்து 100 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளதாக நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது .  அதேபோல் இந்திய அளவில் கலாநிதி மாறனுக்கு 43வது  இடம் கிடைத்துள்ளது .  கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம் பிடித்து உள்ளவர்களில் பெரும்பாலானோர் , ஆதாவது  62 சதவீதம் பேர் சென்னையில் வசிப்பவர்களாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12 பேரும் ,  திருப்பூரிலிருந்து 4 பேரும் சேலத்தில் மூன்று பேரும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர் . 

முதலிடம் பிடித்துள்ள கலாநிதிமாறனையடுத்து சோஹோ செக்யூரிட்டி நிறுவனத்தில் வெம்பு ராதா 9 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்திலும் வேம்பு சேகர் 7,300 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன்  மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர் .  போத்தீஸ் நிறுவனத்தின் சடையாண்டி மூப்பனார்  7,100 கோடி ரூபாய் மதிப்புடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளார் .  அதேபோல் ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட் இன் (ஆரோக்கியா பால் , அருண் ஐஸ் கிரீம் சந்திரமோகன்-  7 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.  கவின்கேரின் சி.கே ரங்கநாதன் 6வது இடத்தை பிடித்துள்ளார் , இவரின்  சொத்து மதிப்பு 5 ஆயிரத்து 300 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'டாட்டா' காட்டிய தாடி பாலாஜி! ஜோஸ் சார்லஸ் கட்சியில் இணைந்த பின்னணி என்ன?
சீமான் பேச்சை காப்பியடித்தாரா விஜய்?.. ஆதாரங்களை அடுக்கும் 'தம்பிகள்'.. இணையத்தில் மோதல்!