வரலாற்றில் இடம் பிடித்த எடப்பாடி..! 'காவிரி வேளாண் மண்டல' சட்டமசோதா தாக்கல் செய்து அதிரடி..!

By Manikandan S R SFirst Published Feb 20, 2020, 1:17 PM IST
Highlights

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மசோதாவை தாக்கல் செய்த முதல்வர், வேளாண்மைன்மையை பாதுகாக்க சில நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதி, அந்த பகுதி மக்களின் கருத்துக்கள் கேட்க தேவையில்லை என்று மத்திய அரசு சமீபத்தில் விதிகளை திருத்தி அறிவிப்பு வெளியிட்டது. இது விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக எதிர்கட்சிக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்தன. ஆனால் எதிர்ப்போ, வரவேற்போ எதுவும் தெரிவிக்காமல் அதிமுக அரசு மவுனமாக இருந்து வந்தது.

இந்தநிலையில் கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது எனவும் தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இது ஒட்டுமொத்த தமிழகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அனைத்து கட்சித்தலைவர்களும் முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மசோதாவை தாக்கல் செய்த முதல்வர், வேளாண்மைன்மையை பாதுகாக்க சில நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். டெல்டா பகுதிகளில் துத்த நாகம், செம்பு, இரும்பு உருக்காலைகள் அமைக்க தடைவிதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். மேலும் புதியதாக ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவை டெல்டா பகுதிகளில் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிகாலையில் கோர விபத்து..! தனியார் பேருந்து-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்..! 20 பேர் உடல் நசுங்கி பலி..!

click me!