தற்போதைக்கு சுவாசக் கவசம் அவசியமில்லை.!! மக்கள் தைரியமாக இருக்கலாம்.!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி...

Published : Mar 09, 2020, 04:24 PM IST
தற்போதைக்கு சுவாசக் கவசம் அவசியமில்லை.!! மக்கள் தைரியமாக இருக்கலாம்.!! சுகாதாரத்துறை அமைச்சர் அதிரடி...

சுருக்கம்

பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வந்த  1,088 பேர் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  சீனா ,  ஜப்பான் , தென் கொரியா , ஈரான், இத்தாலி , ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது  என அவர் தெரிவித்தார்.   

இதுவரை வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 1 லட்சத்து 22, 318  நபர்களை கண்காணித்து உள்ளதாகவும், தமிழக மக்கள்  சுவாச கவசம் அணியும் நிலை தமிழகத்தில்  ஏற்படவில்லை எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ்  தற்போது இந்தியாவையும் தாக்கத் தொடங்கியுள்ளது .  இந்தியாவில் சுமார் 42 பேர் இந்த வைரசுக்கு ஆளாகியுள்ளனர்.  இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகின்றன .  தமிழகத்திலும் வைரஸை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு தீவிரம் கட்டப்பட்டு வருகிறது . இந்நிலையில் வைரஸ் குறித்து அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்ட விரிவான ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

அதில் ,  வைரஸ் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது .  அதனையடுத்து  செய்தியாளர் சந்தித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,  அப்போது பேசிய அவர்,   பள்ளிக்கூடங்கள் ,  தொழில் வளாகங்கள் ,  திரையரங்கம் ,  விமான நிலையம் ,  உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நோய் தடுப்பு  நடவடிக்கைகள் எடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார் .  சென்னை ,  கோவை ,  திருச்சி ,  ஆகிய மாவட்டங்களில் புறநகர் பகுதிகளில் தனிமைபடுத்தி சிகிச்சை வழங்கும் பிரிவுகளை (isolation ward) அமைக்க  உத்தரவிட்டுள்ளார் . கொரோனாவிலிருந்து பாதுகாத்துக்கொள்ள  விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் இன்று மாலைக்குள் வெளியிடப்படும் .  வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் .  சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பப்படுகிறது .  தவறான தகவல் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் ,  சென்னை கிண்டியில் உள்ளதுபோல் கொரோனா வைரஸ் பரிசோதனை நிலையம் தேனியிலும் அமைக்கப்பட்டு வருகிறது . 

வெரும் சோப்பில் கை கழுவினால் மட்டுமே போதுமானது ,  அனைவரும் சுவாசக் கவசம் அணியவேண்டும் என்ற நிலை தமிழகத்தில் ஏற்படவில்லை.   பொதுமக்கள் சுவாசக் கவசம் அணிந்து பீதியை ஏற்படுத்த வேண்டாம் .  வைரஸ் பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் நலவாழ்வு துறை எடுத்துவருகிறது அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் .  வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு  நடவடிக்கை எடுத்துள்ளது .  இதுவரை தமிழகத்தில் 1 லட்சத்து 22,318 நபர்கள் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.  பல்வேறு நாடுகளிலிருந்து தமிழகம் வந்த  1,088 பேர் வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  சீனா ,  ஜப்பான் ,  தென் கொரியா ,  ஈரான்,  இத்தாலி ,  ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவதற்கு விசா மறுக்கப்பட்டுள்ளது  என அவர் தெரிவித்தார். 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!