காதி விற்பனையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது... ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!!

By Narendran SFirst Published Oct 2, 2022, 8:00 PM IST
Highlights

காதி விற்பனையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். 

காதி விற்பனையில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து பேசிய அவர், பன்முகதன்மை கொண்ட இந்திய நாட்டில் காந்தியின் தத்துவம், சிந்தனை, கற்பித்தல் எல்லாம் நாட்டின் தேவை பற்றியும் ஏழைகளைப் பற்றி மட்டுமே  இருந்தது. இதற்கு முன்பு இருந்ததை விட தற்போது நமக்கு மகாத்மா காந்தி மிகவும் அதிகமாக தேவைப்படுகிறார். ஒவ்வொரு பகுதியில் சமூகத்தில் உள்ள நாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து வளர்ந்தால் தான் நம் நாடு வளரும்.

இதையும் படிங்க: திருச்சியில் போதை ஊசிக்கு வாலிபர் பலி - 2 பேர் கைது மூவர் ஓட்டம்

நாட்டின் ஜவுளித்துறை வளர்ச்சியை மேம்படுத்தவே காந்தியடிகள் சுதேசி இயக்கத்தை தொடங்கினார். காதி நாட்டின் ஒரு சிறந்த ,சக்தி வாய்ந்த சின்னமாக விளங்குகிறது. தமிழக அரசு காதி விற்பனையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. காதியை பற்றி மாணவர்கள் இடத்திலும் இளைஞர்கள் இடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விற்பனையாளர்கள் புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து காதியை விளம்பரப்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க: எடப்பாடி ஒரு தொடை நடுங்கி - டிடிவி தினகரன் அதிரடி

எல்லாரும் காதியை வாங்க வேண்டும் காதியை அணிய வேண்டும். உலக அளவில் காதி வித வித வடிவங்களில் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் நிறைய புதிய வடிவங்களை நாம் தயாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காதி பவனில் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார்.

click me!