கடுமையான விலைவாசி உயர்வால் தமிழகம் தத்தளித்துக் கொண்டுள்ளது. தக்காளி உட்பட காய்கறி, மளிகை பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது என்று சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் இன்று மதுரையில் அளித்து இருக்கும் பேட்டியில், ''சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருட்கள் வெங்காயம், தக்காளி. இந்த இரண்டும் இல்லாமல் எந்த சமையலையும் இல்லத்தரசிகளால் செய்ய முடியாது. சரி மற்ற காய்கறிகள் வைத்து சமைக்கலாம் என்று பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. பச்சை மிளகாய், இஞ்சியில் தொடங்கி விலைவாசி எட்டாத தூரத்துக்கு உயர்ந்திருக்கிறது.
இத்துடன், மளிகைப் பொருட்களின் விலையையும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பார்க்கும்போது கவலை அளிக்கிறது. திடீரென்று முதலமைச்சருக்கு ஞானோதயம் ஏற்பட்டு தக்காளிக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளார். ஆனால் எடப்பாடியார் இதை முன்கூட்டியே அறிக்கை வாயிலாகவும், பேட்டி வாயிலாகவும் எடுத்துக்கூறி வந்தார். ஆனால் அரசு தூங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
undefined
பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கிய ஊழியர்; முறையிட்ட குடிமகனை கும்மி எடுத்த காவல் அதிகாரி
நாட்டில் மளிகைப் பொருட்கள் விலை உயர்வுக்கு ஆலோசனை செய்யவில்லை முன்வரவில்லை. ஆனால், மதுவுக்கு ஆய்வு செய்து கொண்டுள்ளனர். எந்த மது விற்பனையாகிறது, எந்த மது பற்றாக்குறை இருக்கிறது, சிங்கிளாக எப்படி மது அருந்தலாம் என்ற ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டுக்கு முக்கியமா?
இதற்கும் மேலாக, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு , குடிநீர் கட்டண உயர்வு என மக்களின் பொருளாதார வாழ்வாதாரமே கேள்விகுறியாகி உள்ளது. தாங்க முடியாத விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறி அதற்கும் மேல் மக்களின் தலையில் சுமையை வைத்துவிட்டனர். தமிழகத்தில் வறுமைக் கோட்டில் இருப்பவர்கள், நடுத்தர குடும்பத்தினர் அதிமாக உள்ளனர். இவர்கள் பட்ஜெட் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாது. விலைவாசி உயர்வால் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
உடனடியாக முதலமைச்சர் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விலைவாசி 8 முதல் 20 சதவீதம் வரை உயந்துவிட்டது.
ஆளுநரை வெளியேற்றாவிட்டால் தமிழகத்தில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் - எஸ்டிபிஐ எச்சரிக்கை
சீரகம் ரூ. 300 ரூபாய் முதல் ரூ. 700 வரை உயர்ந்துவிட்டது. துவரம் பருப்பு 120 முதல் 160 ரூபாய், புளி 160 முதல் 200 ரூபாய், உளுந்து 100 ரூபாய் முதல் 150 ரூபாய், பாசி பருப்பு 100 ரூபாய் முதல் 110 ரூபாய் என உயர்ந்துவிட்டது. இதைத்தான் எடப்பாடியார் இந்த அரசு முடங்கிவிட்டது என்று தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
மதுரையில் கருணாநிதி நூலக திறப்பு விழாவில் கலந்து கொள்ள பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி வரவழைக்க பள்ளிகளுக்கு சர்குலர் அனுப்பப்பட்டுள்ளது, இதனால் பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விளையாட்டு மைதானங்களில் அரசு விழா நடத்தக் கூடாது என்ற சட்டம் இருக்கும்போது, தற்போது விளையாட்டு மைதானங்களில் அரசு விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் மைதானங்கள் பாதிக்கப்படுகிறது.
விலைவாசி உயர்வால் தமிழக தாய்மார்கள் கண்ணீர் வடிக்கின்றனர். வேதனை உச்சத்தில் உள்ளனர். இந்த அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்'' என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.