கொடநாடு வழக்கை விரைந்து விசாரிக்காத தமிழக அரசை கண்டித்து வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை வழக்கு நிலை என்ன.?
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், திமுக ஆட்சி அமைத்ததும் 90 நாட்களுக்குள் கொடநாடு கொலை கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்போம் என கூறிய அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது திமுக மீது கோபத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார். விசாரண மாடங்களும், விசாரிக்கப்படும் அமைப்புகளும் மாறுகிறதே தவிர இந்த வழக்கின் சூத்திரதாரி யார் என்பதும், இந்தக் குற்றத்தை முன்னின்று நடத்திய கொடூரன் யார் என்கிற முடிச்சும் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை.
undefined
வழக்கு நீர்த்து போக செய்ய பேரம்
இவையாவிற்கும் மேலாக மிகப் பிரசித்திப் பெற்ற தமிழகத்தின் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கொடநாடு கொலை, கொள்ளை குறித்து புலனாய்வு விசாரணை ஒன்றை நடத்தி கொடநாடு கொலை, கொள்ளையில் ஈடுபட்டதாக, கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே வந்திருக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களை அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று கலந்துரையாடியதில் இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஒருவர் தங்களிடம் வந்து பேரம் பேசியதாக அவர்கள் புகைப்படத்தைக் காட்டி அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்ட பிறகும் கூட இன்று வரை அதன்மீது எந்தவிதமான தொடர் நடவடிக்கைகளும், விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது அதிர்ச்சியையும்,
ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டம்
ஆச்சரியத்தையும் தருகிறது. எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் கூடுதல் கவனமும், அதி முக்கியத்துவம் கொடுத்து விசாரித்து நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்தும் வகையில் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பி.எஸ் இடம், ஆட்சியில் அதிகாரத்தில் இருந்தபோது ஏன் வலியுறுத்தவில்லை என கேட்டதற்கு, அப்போது தான் துணை முதலமைச்சராக தான் இருந்ததாகவும், அந்த பதவிக்கு எந்த அதிகாரமும் முக்கியத்துவமும் இல்லை என பதிலளித்தார்.
பாஜக கூட்டத்திற்கு அழைப்பு இல்லை
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என கூறினார். வரும் 18 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டத்தில் பங்கேற்க தமக்கு அழைப்பு வரவில்லை என கூறிய ஓ.பி.எஸ், தங்கள் அணியின் அடுத்த மாநாடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார். தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ரவீந்திரநாத் தேர்தல் வழக்கின் தீர்ப்பு முன்னுக்கு பின் முரணாக உள்ளது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என கூறினார்.
இதையும் படியுங்கள்