மெரினாவில் இடம் கிடையாது! காந்தி மண்டபம் அருகில் இரண்டு ஏக்கர் தருவதற்கு தயார்! தமிழக அரசு அறிவிப்பு.

First Published Aug 7, 2018, 8:14 PM IST
Highlights

சட்ட சிக்கல்கள் இருப்பதால் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கமுடியாது எனவும், அன்னாரின் இறப்பினை அனுசரிக்கும் விதமாக நாளை ஒரு நாள் அரசினர் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறிய 24  மணி நேரம் முடிவதற்கு 20  நிமிடங்கள் முன்பாகவே அவருடைய உயிர் பிரிந்தது.
அதனால் தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.


இந்நிலையில் தலைமை செயலாளர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டவை!

சட்ட சிக்கல்கள் இருப்பதால் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கமுடியாது எனவும், அன்னாரின் இறப்பினை அனுசரிக்கும் விதமாக நாளை ஒரு நாள் அரசினர் விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், குண்டுகள் முழங்க கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

அரசு நாளிதழில் கலைஞர் கருணாநிதி அவர்களின் இறப்பு வெளியிடப்படும் எனவும் தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார். அண்ணா, எம்.ஜி. ஆர், ஜெயலலலிதா என அனைவரது உடலும் மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் கிடைக்காததை திமுகவினருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தினர் தொடர்ந்து மெரினாவில் இடம் கிடைக்கும்படி வற்புறுத்தி வருகின்றனர்.

click me!