தமிழக அரசு அதிரடி சரவெடி சாதனை.. ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் தட்டி தூக்கிய ஸ்டாலின்.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 11:47 AM IST
Highlights

அந்த வகையில் அவர் தேர்தல்  பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ஆவின் பால் விலை குறைக்கப்படும் என கூறியிருந்தார்.

ஆவின் பால் விலை குறைக்கப்பட்டதன் எதிரொலியாக இரண்டு மாதங்களில் ஆவின் பால் விற்பனை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்ட இரண்டு மாத இடைவெளியில் கூடுதலாக 1 லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்திருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில்  அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு மக்கள் நல திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அதிரடியாக அறிவித்து வருகிறார். 

அந்த வகையில் அவர் தேர்தல்  பிரச்சாரத்தின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் ஆவின் பால் விலை குறைக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி பதவியேற்றதும் ஆவின்பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய்  குறைப்பதற்கான ஆணையில் அவர் கையெழுத்திட்டார். அதன்படி கடந்த மே 16-ம் தேதி முதல் 1 லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைப்பு நடைமுறைக்கு வந்தது.  அதன்படி ஆவின்பால் இப்பட்டியலில் ஒரு லிட்டர் பாலின் விலை 40 ரூபாயில் இருந்து 37 ஆக குறைக்கப்பட்டது. அதேபோல் நிலைப்படுத்தப்பட்ட பால் விலை 22.50 இல் இருந்து 21 ஆக குறைக்கப்பட்டது. அதேபோல் சமன் படுத்தப்பட்ட பால் சில்லரை விற்பனையில் 1 லிட்டர் 43 ரூபாயிலிருந்து 40 ஆக  குறைக்கப்பட்டது. அதேபோல் நிலைப்படுத்தப்பட்ட பால் அரை லிட்டர் 23.50 பைசா வெளியிலிருந்து 22 ஆக குறைக்கப்பட்டது.

இந்த பால் விலை குறைப்பு, பொதுமக்கள் மத்தியிலும், நடுத்தர, ஏழை எளிய  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் பலரும் தனியார் பால் பாக்கெட்டிகளை வாங்கி வந்தவர்கள் கூட ஆவின்பால் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே ஆவின் பால் விற்பனை பன்மடங்கு உயர்ந்துள்ளது. விலை குறைக்க படுவதற்கு முன்னர், அதாவது கடந்த மே மாதத்தில் சுமார் 24 லட்சத்து  69 ஆயிரம் லிட்டர் விற்கப்பட்ட நிலையில், ஜூன் மாதத்தில் 26 லட்சத்து 27 ஆயிரம் லிட்டர் எனவும், அதே தற்போது ஜூலை மாதத்தில் 26 லட்சத்து 37 ஆயிரம் லிட்டர் எனவும் மளமளவென உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த இந்த இரண்டு மாத காலத்தில் கூடுதலாக ஒரு லட்சத்து 68 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விற்பனை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!