விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார்... அடித்துச் சொல்லும் தங்க.தமிழ்செல்வன்..!

Published : Jul 30, 2021, 11:31 AM IST
விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார்... அடித்துச் சொல்லும் தங்க.தமிழ்செல்வன்..!

சுருக்கம்

சசிகலா, தனிப்பட்ட குடும்பம் இன்றைக்கு அதிமுக-வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார்

விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார் என திமுகவை சேர்ந்த தங்க.தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

தேனியில் இது குறித்து பேசிய அவர், ‘’அதிமுக-வை வழிநடத்த தெரியாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தத்தளித்து வருகின்றனர். இவர்கள் தங்களது சண்டை சச்சரவுகளை தீர்த்து கொள்ளத்தான் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டு காலமாக ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதிக்கு செய்யாத திட்டங்களை தற்போது பொதுமக்கள் என்னிடம் கோரிக்கையாக வைக்கின்றனர். எனவே, நான் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். நான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறுவதற்கு தகுதி இல்லை.சசிகலா, தனிப்பட்ட குடும்பம் இன்றைக்கு அதிமுக-வை கைப்பற்ற முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி வருகிறார். ஆனால் விரைவில் சசிகலா அதிமுக-வை கைப்பற்றுவார்.”என்று கூறினார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர். மேலும், பாஜக மூத்த தலைவர் அமித் ஷா உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேசினர்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!