மதத்தின் பெயரால் கேரளாவுக்கு பசு கடத்தல்.. சிவசேன விடுத்த பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jul 30, 2021, 11:21 AM IST
Highlights

அதிலும் இந்த பசு இனத்தை அழிக்கும் வகையில் சமூக விரோத கும்பல்களால் , அடிமாட்டிற்கு கொண்டு செல்லபடுகிறது. இதனை பலமுறை பொதுமக்கள் உதவியுடன், விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள், காவல்துறையினர் அவ்வப்போது  கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்கிறார்கள்.

நாட்டு மாடுகளை சட்ட விரோதமாக வாகனங்களில் கேரளாவிற்கு கடத்துவதை தடுக்க வேண்டும் என்று சிவசேனா கட்சியின் இளைஞர் அணிமாநில துணைத் தலைவர் முருக தினேஷ் வலியுறுத்தியுள்ளார். நேற்று சென்னை தமிழ்நாடு காவல்துறை இயக்குனர்யிடம் மனு கொடுத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பசு இனத்தை அழிக்கும் வகையில் ஈரோடு , திருப்பூர் , கோவை , நீலகிரி வழித்தடங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக மிகவும் சித்தரவதைகள் செய்யப்பட்டு பல்வேறு துன்புறுத்தல்களை செய்து அடைத்து வைக்கப்பட்டு கன்டைனர் லாரிகள் மற்றும் சரக்கு வாகனத்தில் அதிகப்படியான பசுமாடுகளை ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. 

அதிலும் இந்த பசு இனத்தை அழிக்கும் வகையில் சமூக விரோத கும்பல்களால் , அடிமாட்டிற்கு கொண்டு செல்லபடுகிறது. இதனை பலமுறை பொதுமக்கள் உதவியுடன், விலங்குகள் நல வாரிய உறுப்பினர்கள், காவல்துறையினர் அவ்வப்போது  கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்கிறார்கள். ஆனால் சமூக விரோதிகள் திட்டமிட்டு , நவீன முறையில் நூதனமாக தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்களில், இந்திய விலங்குகள் நலச்சட்டத்தை மீறி பெட்டி போல அடைத்து வைக்கப்பட்டுள்ள வாகனத்தில் நூதனமாக தமிழகத்தின் எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நுழைந்து கோவை வழியாக கேரளாவிற்கு அடிமாட்டிற்கு கொண்டு செல்கின்றனர்.

இதனை செய்கின்றவர்கள் மதத்தின் பெயராலும், சிறுபான்மையினர் என்ற பெயராலும் பசு இனத்தையே அழிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த திட்டமிட்டு பசு கடத்தல் மூலம் நமது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படும் சமூக விரோதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு பெரிய அளவில் ஆர்பாட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்தார்.

 

click me!