எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிகவுக்கு வந்த ஒரு தொகுதி... ஜெயிக்கப்போவது யாரு?

By sathish kFirst Published May 20, 2019, 11:31 AM IST
Highlights

நேற்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது கள்ளக்குறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

நேற்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, எக்ஸிட் போல் ரிசல்டில் தேமுதிக ஒரு தொகுதியில் ஜெயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது கள்ளக்குறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

தேமுதிகவுக்கு அளிக்கப்பட்ட நான்கு தொகுதிகளுடன், அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளை பெற்றுள்ளது, பாஜக 5 , தேமுதிக 4 தொகுதிகளையும், புதிய தமிழகம் மற்றும் புதிய நீதிக்கட்சி, NR.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியை பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் போட்டியிட்டது அதிமுக கூட்டணி.  

அதிமுக கூட்டணி யில் இடம்பிடித்துள்ள, தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. அதில், கள்ளக்குறிச்சியில் தேமுதிக துணைச் செயலாலர் எல்.கே.சுதீஷ், திருச்சியில், அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், விருதுநகரில் தேமுதிக விசாரணைக் குழு தலைவர் அழகர் சாமி, வட சென்னையில் தேமுதிக கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் போட்டியிட்டனர்.

இந்நிலையில், இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவுக்குப் பின், தமிழகத்தில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை கைப்பற்றுமென எக்ஸிட் போல் ரிசல்ட் வெளியானது. அதில்,  நியூஸ் எக்ஸ்  குறைந்தது 34 மக்களவை தொகுதிகள் முதல் அதிகபட்சமாக 38 தொகுதிகளையும் திமுக கூட்டணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அதிமுகவுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காமலும் போகலாம், அல்லது அதிகபட்சம் 4 தொகுதிகள் வரை தான் கிடைக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திமுக கூட்டணிக்கு 38 இடங்களில் மொத்தம் 22 முதல் 24 இடங்கள் வரை கிடைக்கும். அதில், தி.மு.க 12-14 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிகிறது. காங்கிரஸ் 10ல் 7 இடங்கள் வரை படு தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் இழக்கும் இந்த தொகுதிகள் அனைத்தும் அப்படியே அதிமுக ஜெயிக்கும்.  அதிமுக கூட்டணிக்கு 14 முதல் 16 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில், அதிமுக 8-10 தொகுதிகளிலும், பாஜக 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தேமுதிக 1-2 தொகுதிகளிலும் ஜெயிக்க வாய்ப்புள்ளது.  ஆக ஒரு தொகுதி கூட வராது என சொல்லப்பட்ட தேமுதிக ஆச்சர்யமாக ஒரு தொகுதி கண்டிப்பாக ஜெயிக்கும் என சொல்லப்படுவது எந்தத் தொகுதி? அது கள்ளக்குறிச்சியாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் தேமுதிக வாக்குவங்கியை பலமாக வைத்திருக்கும் தொகுதி,  6 சட்டமன்றத் தொகுதியில் கள்ளக்குறிச்சி, கெங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு தொகுதிகளும் இருப்பதாலும், இதில்  முதல்வர் தொகுதி வருவதாலும் அதிமுக கூட்டணிக்கே அதிக வாக்கு விழுந்திருக்க வாய்ப்புள்ளதாக சொல்லபப்டுகிறது.

click me!