பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது !! அடித்துச் சொல்லும் ஏபிபி நியூஸ் !!

By Selvanayagam PFirst Published May 20, 2019, 9:24 AM IST
Highlights

மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்று பெரும்பாலன ஊடகங்கள் தேர்தலுக்கும் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவித்திருந்த நிலையில் ஏபிபி நியூஸ் சேனல் கருத்துக் கணிப்பு மட்டும்  பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று தெரிவித்துள்ளது
.

17 ஆவது மக்களவைக்கு கடந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நேற்று வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தலுக்குப் பின்  நேற்று மாலை அனைத்து ஆங்கில ஊடகங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டன.

அதில் பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏபிபி நியூஸ் சேனல் கருத்துக் கணிப்புப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியால் பெரும்பான்மைக்கு தேவைப்படும் தொகுதிகளை வெல்ல முடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல் நடைபெற்ற 542 தொகுதிகளில், தே.ஜ.க கூட்டணி வெறும் 267 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் பிற கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை தாண்டிவிடும் என்றுதான் கூறின.

ஏபிபி நியூஸ் கருத்துக் கணிப்புப்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில்  பாஜக மட்டும் 218 தொகுதிகளைத்தான் வெல்ல முடியும் என கூறப்பட்டுள்ளது. ஆக மொத்தம், பெரும்பான்மை பலத்திற்கு, 5 தொகுதிகளை தேசிய ஜனநாயக  கூட்டணி குறைவாகவே பெறப்போகிறது என்று தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 127 தொகுதிகளைத்தான் வெல்லும் என்று ஏபிபி நியூஸ் கணித்துள்ளது. 

click me!