ட்ரம்ப் விருந்திற்கு எடப்பாடிக்கு வந்த அழைப்பு..! தாறுமாறு கொண்டாட்டத்தில் அதிமுக..!

By Manikandan S R SFirst Published Feb 23, 2020, 12:59 PM IST
Highlights

விருந்தில் குடியரசு தலைவர்,பிரதமர், மத்திய அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்களுடன் மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் இந்தியாவில் டிரம்ப் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதுடன் இரு நாடுகளுக்கிடையேயும் பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கின்றன. டிரம்ப்பின் இந்திய வருகை உலக நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.

இந்தியா வருகை தரும் அமெரிக்க அதிபருக்கு தலைநகர் டெல்லியில் சிறப்பான வரவேற்பிற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அவற்றுடன் பிரம்மாண்ட விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் குடியரசு தலைவர்,பிரதமர், மத்திய அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்களுடன் மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அதன்படி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெற்றி தொடரும்.. ஸ்டாலின் அரியணை ஏறுவார்..! அடித்துக்கூறும் காங்கிரஸ் எம்.பி..!

அமெரிக்க அதிபருக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழக முதல்வர் விருந்தில் பங்கேற்க முடிவு செய்து உள்ளதாகவே தெரிகிறது. இதற்காக நாளை அல்லது நாளை மறுநாள் முதல்வர் டெல்லி செல்ல உள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விருந்தில் அமெரிக்க அதிபரை மாநில முதல்வர்கள் சந்தித்து பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வருக்கு அமெரிக்க அதிபரின் விருந்தில் பங்கேற்க்க அழைப்பு வந்துள்ளதால் அதிமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். 

click me!