வெற்றி தொடரும்.. ஸ்டாலின் அரியணை ஏறுவார்..! அடித்துக்கூறும் காங்கிரஸ் எம்.பி..!

Published : Feb 23, 2020, 12:23 PM ISTUpdated : Feb 23, 2020, 12:32 PM IST
வெற்றி தொடரும்.. ஸ்டாலின் அரியணை ஏறுவார்..! அடித்துக்கூறும் காங்கிரஸ் எம்.பி..!

சுருக்கம்

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவும் இல்லை அஸ்திவாரமும் இல்லை என்ற திருநாவுக்கரசர் மோடி பிரதமரான பிறகு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி தொடரும் எனவும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் சார்பாக திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர். தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களிடம் மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய அவர் விரைவில் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தெரிவித்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் காலத்திருலிருந்து பேசப்பட்டு வரும் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டு அதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றார். எனினும் அதுகுறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஆலோசித்து விரிவான தகவல்களைப் பகிா்ந்து கொள்ளவேண்டும் எனவும் அப்போதுதான் விடுபட்ட இடங்களை இணைக்க வலியுறுத்த முடியும் என்றும் கூறினார்.

ரவுடியின் மனைவியை தகாத உறவுக்கு அழைத்த திமுக பிரமுகர்..! சரமாரியாக வெட்டிப்படுகொலை..!

தமிழகத்தில் பாஜகவிற்கு ஆதரவும் இல்லை அஸ்திவாரமும் இல்லை என்ற திருநாவுக்கரசர் மோடி பிரதமரான பிறகு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என விமர்சித்தார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி தொடரும் எனவும் சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பார் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் குடியுரிமை சட்டத்தை மக்களின் எதிர்ப்பை மீறி அமல்படுத்தியதன் பலனை வரும் தேர்தலில் ஆட்சியாளர்கள் அனுபவிப்பார்கள் என்றும் திருநாவுக்கரசர் கூறியிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

முக்தார் மீது நடவடிக்கை வேண்டும்.. டெல்லி சென்ற கரு.நாகராஜன்.. ஜி.கே.வாசனிடம் கடிதம்!
மகளிர் உரிமைத் தொகை உயருகிறது..! எவ்வளவு தெரியுமா? முதல்வர் சொன்ன குட்நியூஸ்!