சிறப்பு வேளாண் மண்டலத்துக்கு சட்டம், சொன்னபடி செய்யும் எடப்பாடி...!! வாயடைத்து நிற்கும் எதிர்கட்சிகள்...!!

Published : Feb 18, 2020, 12:34 PM ISTUpdated : Feb 18, 2020, 12:36 PM IST
சிறப்பு வேளாண் மண்டலத்துக்கு சட்டம்,  சொன்னபடி செய்யும் எடப்பாடி...!! வாயடைத்து நிற்கும் எதிர்கட்சிகள்...!!

சுருக்கம்

இதனையடுத்து   இது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சர் ஜெயக்குமார் டெல்லி சென்று மத்திய அமைச்சகத்திடம் மனு வழங்கியுள்ளார்.   

சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில்  நாளை கூடவுள்ள தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது .  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நாளை மாலை கூடவுள்ள தமிழக அமைச்சரவை கூட்டத்தில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .  காவிரி டெல்டா  மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண்  மண்டலமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அது தொடபாக  சட்டத்திற்கு ஒப்புதல் நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்படும் என தெரிகிறது 

சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ம் தேதி கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .  இதுதொடர்பாக விரைவில் சட்டம் இயற்றப்படும் என்றும் தெரிவித்தார் .  முதலமைச்சரின் இந்த அறிவிப்பு குறித்து  எதிர்க்கட்சிகள்  பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . இதனையடுத்து   இது குறித்து ஆலோசிக்க தமிழக அமைச்சர் ஜெயக்குமார்டெல்லி சென்று மத்திய அமைச்சகத்திடம் மனு வழங்கியுள்ளார். 

  

தற்போது நடைபெற்று வரும் சட்டசபை கூட்டத்தொடரில் இது தொடர்பாக சட்டம் கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது .  இது தொடர்பான சட்ட மசோதா வரும் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது .  இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்  நாளை மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது ,  அப்போது பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு  செயல் வடிவம்  கொடுக்கும் முறையில் ஒப்புதல் அளிக்கப்படும் என தெரிகிறது .
 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!