ராணுவத்தில் பெண் அதிகாரிகள்...!! நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர்...!!

Published : Feb 18, 2020, 12:08 PM IST
ராணுவத்தில் பெண் அதிகாரிகள்...!!  நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவணங்கிய பாதுகாப்புத்துறை அமைச்சர்...!!

சுருக்கம்

பாதுகாப்பு படைகளில்  பெண்களுக்கு முழுமையான பணி சேவை வழங்குவது தொடர்பான வழக்கில் ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் தலைமைப் பதவி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .   

இந்திய ராணுவத்தில்  பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்பு தெரிவித்துள்ளார் . சவால்கள் நிறைந்த இந்திய ராணுவ படையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் இடம் வழங்கப்பட்டு வருகிறது .  இந்நிலையில் இந்திய ராணுவ படைகளை வழிநடத்தி செல்வதற்கு , பெண்களை அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .  இதை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றுள்ளார் .  பாதுகாப்பு படைகளில்  பெண்களுக்கு முழுமையான பணி சேவை வழங்குவது தொடர்பான வழக்கில் ராணுவத்தில் பெண்களுக்கு ஏன் தலைமைப் பதவி வழங்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .

 ஆண்களின் உடல் வலிமைக்கு நிகராக பெண்களால் பணியாற்ற முடியாது என மத்திய அரசு பதிலளிக்க இதற்கு பதில் அளித்திருந்த  நிலையில் இந்த வகை வழக்கு நீதிபதி சந்திரசூட்  முன்பு விசாரணைக்கு வந்தது .  அப்போது மத்திய அரசு வைத்த வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர் .  அப்போது தெரிவித்த நீதிபதிகள் பெண் ராணுவ அதிகாரிகளுக்கான நிரந்தர பணியிடங்களை  மூன்று மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  பாதுகாப்புத் துறையை பொருத்தவரையில் ஆண்களும் பெண்களும் விதிமுறைகள்  ஒன்றுதான் இந்த விவகாரத்தில் மத்திய அரசின் மனநிலையும் மாற வேண்டும் ,  இந்திய ராணுவத்தின் தலைமை பதவிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான முறையில் இடம் வழங்க வேண்டும்.  இந்நிலையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு நிரந்தர பணியிடம் வழங்காதது  மத்திய அரசின் பாரபட்சம் என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது . 

 

எனவே ராணுவத்தில்  பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்ற மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரவேற்று தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர் ஆயுத பணியில் பெண்கள் நிரந்தரமாக  பணியாற்றலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருப்பதை வரவேற்கிறேன் .  கடந்த சுதந்திர தின உரையின்போது பெண்கள் ,  படைகளை வழி நடத்திச் செல்லும் அளவிற்கு ஆயுதப்படையில் அவர்களுக்கு நிரந்தர பணியிடங்கள் வழங்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார் . இதை ராஜ்நாத் சிங் டுவிட்டரில்  பதிவிட்டுள்ளார் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் 1,500 பெண் அதிகாரிகள் பயனடைவார்கள் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . 
 

PREV
click me!

Recommended Stories

பாஜக அரசுக்கு ஆதரவு... என் முடிவில் மன்னிப்பு கேட்க மாட்டேன்.. காங்கிரஸ் கட்சிக்கு சசி தரூர் பதிலடி..!
அண்ணாமலைக்கு சீட் இல்லை... மோடி எடுத்த முக்கிய முடிவு..! பாஜகவின் இந்திய முகமாக மாறும் தமிழர்..!