டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு... அதிரவைக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Feb 18, 2020, 11:58 AM IST
Highlights

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு இன்று தமிழக அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, அந்நியூர் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு தொடர்ப்பு இருப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 161-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு இன்று தமிழக அரசின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டனர். 

பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- தமிழகத்தில் அனைத்து மத மக்களும், மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு ஒரு சிறிய இன்னல் கூட நேராத வகையில், முழுமையான பாதுகாப்பை அதிமுக அரசு வழங்கி வருகிறது. கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தபோது, பலர் உயிர் இழந்தனர். திமுக ஆட்சியில் முஸ்லிம்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்பட்டனர் என்பதை யாரும் மறக்க முடியாது. சி.ஏ.ஏ.வால் முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதை தமிழக முதல்வர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதையும் படிங்க;- பிடிச்சவன் கிட்ட எல்லாம் படுக்கையை விரித்த ஆசிரியை... உல்லாசத்திற்கு தடையாக இருந்த கணவரை கொல்ல முயற்சி..!

மேலும், சட்டப்பேரவையில் நேற்று பேசிய போது திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், 2006-2011ம் ஆண்டுகாலத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இதில் கே.என்.நேரு, அந்தியூர் செல்வராஜ், மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்துக்கு தொடர்பிருப்பதாகவும், அவர்களின் பரிந்துரை கடிதங்கள் முறைகேடு தொர்பான சோதனையின் போது அப்போதைய டிஎன்பிஎஸ்சி தலைவர் செல்லமுத்து வீட்டில் சிக்கியிருப்பதாகவும் பதிலளித்தார். ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் அவதூறு கருத்து திமுகவின் பண்பை காட்டுவதாகவும் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

click me!