நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டாலும் போராட்டம் தொடரும்... கொந்தளிக்கும் அதிமுக கூட்டணி எம்எல்ஏ..!

By vinoth kumarFirst Published Feb 18, 2020, 12:31 PM IST
Highlights

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4-வது நாளாக போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வீதிகளில் போராடிய மக்களின் தடுப்புகளை அகற்றிவிட்டு அவர்களே உள்ள நுழைந்து போராட்டக்காரர்களை இழுத்துப் போட உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் பதில் அளிக்கவில்லை. 

நாங்கள் பிக்பாக்கெட் அடித்தோமா, கொலை செய்தோமா, கொள்ளையடித்தோமா இல்லை ரஜினியைப் போல கந்துவட்டிக்கு பணம் கொடுத்தோமா. இது பெட்ரோல் டீசல் விலைக்கான போராட்டமல்ல குடியுரிமைக்கான மக்களின் வாழ்வுக்கான போராட்டம் என தமிமுன் அன்சாரி ஆவேசமாக கூறியுள்ளார்.  

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. முதல் நாளான அன்று 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதையடுத்து, இரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் நேற்று மீண்டும் கூடிய சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வண்ணாரப்பேட்டை போராடத்தில் தடியடி நடத்திய காவல்துறையை கண்டிக்கும் பதாகையுடன் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சட்டப்பேரவைக்கு வருகை புரிந்தது பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பதாகையில், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி., சட்டங்களுக்கு எதிராக வண்ணாரப்பேட்டையில் அமைதி வழியில் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலை கண்டிக்கிறோம் என கூறப்பட்டிருந்தது.

இதனையடுத்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4-வது நாளாக போராடிக் கொண்டிருக்கும் மக்களை நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி சந்தித்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- வீதிகளில் போராடிய மக்களின் தடுப்புகளை அகற்றிவிட்டு அவர்களே உள்ள நுழைந்து போராட்டக்காரர்களை இழுத்துப் போட உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு சட்டப்பேரவையில் முதல்வர் பதில் அளிக்கவில்லை. 

துப்பாக்கியால் சுட்டாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் பிக்பாக்கெட் அடித்தோமா, கொலை செய்தோமா, கொள்ளையடித்தோமா இல்லை  ரஜினியைப் போல கந்துவட்டிக்கு பணம் கொடுத்தோமா. இது பெட்ரோல் டீசல் விலைக்கான போராட்டமல்ல குடியுரிமைக்கான மக்களின் வாழ்வுக்கான போராட்டம் என தமிமுன் அன்சாரி ஆவேசமாக பேசியுள்ளார். 

click me!