வரலாற்றில் இடம் பிடித்தார் எடப்பாடி...!! வாயார வாழ்த்தும் தமிழக விவசாயிகள்...!! திமுக கப் சிப்...

By Ezhilarasan BabuFirst Published Feb 20, 2020, 2:27 PM IST
Highlights

முதலமைச்சர் மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார் ,  அப்போது கூறிய அவர் ,  ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் .      
 

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார் .  தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றது முதல் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து வருகிறார் .  அவர் அறிவித்த  பல  முக்கிய திட்டங்களில் மிகவும்  சிறப்பான அறிவிப்பாக கருதப்படுகிறது காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்பு. 

 

முதல்வரின் இந்த அறிவிப்பு  எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது, இந்நிலையில்   அதற்கான சட்ட முன்வடிவை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார் . காவிரி டெல்டா மாவட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி முன்கூட்டி அறிவித்திருந்தார் ,  இதுதொடர்பாக விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறினார், இந்நிலையில்  இது பற்றி சட்டமன்றத்தில் பேசி எதிர்க்கட்சித் தலைவர் மு. க ஸ்டாலின் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்பில் தற்போதைய நிலை என்ன என கேள்வி எழுப்பியதுடன்,   சிறப்பு வேளாண் மண்டலம் அறிவிப்பு வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்து விடக்கூடாது .  விரைவாக இது தொடர்பான சட்ட மசோதா கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.  

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ,  விவசாயிகளுக்கு விரைவில் நல்ல செய்தி வரும் என்றார் .  இதன்பின்னர் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது . இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட காவிரி டெல்டா வேளாண் மண்டலம் தொடர்பான சட்ட மசோதா இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றினார் ,  அப்போது கூறிய அவர் ,  ஒரு விவசாயியாக இந்த மசோதாவை தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார் .      

 

 

click me!