நாளை அவசர அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்... பொதுமுடக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு..?

Published : Jun 14, 2020, 10:53 AM IST
நாளை அவசர அவசரமாக கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்... பொதுமுடக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு..?

சுருக்கம்

கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மீண்டும் பொதுமுடக்கம் தொடர்பாக முக்கிய அறிவிப்பி வெளியாக வாய்ப்புள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் எதுவும் பலன் அளிக்கவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து கொண்டே செல்கிறது. 

தமிழகத்தில் நேற்று 1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 30,444ஆக  உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் நேற்று 30 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து 14வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நண்பகல் 12 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொதுமுடக்கம், மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்ளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக்கு பின்னர் ஓரிரு நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மருத்துவ நிபுணர்களுடன் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்தவுள்ள நிலையில், 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!