திமுக எம்.எல்.ஏ. மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்..!

Published : Jun 14, 2020, 10:20 AM ISTUpdated : Jun 28, 2020, 01:30 PM IST
திமுக எம்.எல்.ஏ. மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு... அதிர்ச்சியில் உடன் பிறப்புகள்..!

சுருக்கம்

ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.கார்த்திகேயன் மனைவியும், மகளும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி, திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் வசந்தம் கார்த்திகேயன். இவர், தன் தொகுதியில், 3 மாதங்களாக, தினமும் கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களுக்கு, நிவாரண உதவிகளை வழங்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், இவரது மனைவி இளமதி (40) மற்றும் இளைய மகள்  மகன்யா(8) இருமல், காய்ச்சல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் பெரம்பலுார் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. 

இதையடுத்து, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மற்றும் அவரது குடும்பத்தினர், 7 பேரும் பரிசோதனை செய்தனர். மேலும், அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

திருவனந்தபுரம் வெற்றியால் உற்சாகம்..! தமிழகம்- மேற்கு வங்கத்துக்கு பாஜக சவால்..!
50 தொகுதிகளை கேட்டு அடம் பிடிக்கும் பாஜக.. முப்பதே ஓவர்.. கறார் காட்டும் எடப்பாடி..!