TN Budget 2023 : ‘கொங்கு மண்டலம்’ டார்கெட்! தமிழக அரசின் பட்ஜெட்டும் திமுக Vs அதிமுக மோதலும் - பின்னணி என்ன?

By Raghupati R  |  First Published Mar 20, 2023, 3:20 PM IST

தமிழக அரசின் 2023ம் ஆண்டின் பட்ஜெட் இன்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். கொங்கு மண்டலத்தை மையமாக வைத்து தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.


கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், கொங்கு மண்டலத்தில் அக்கூட்டணிக்கு சற்று பின்னடைவே ஏற்பட்டது. அங்கு அதிமுக கூட்டணி தனது பலத்தை நிரூபித்தது. 

கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களை கொண்ட கொங்குமண்டலத்தில் 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை அதவாது சுமார் 65 சதவீத இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த கூட்டணி மொத்தம் வென்ற 75 தொகுதிகளில் சுமார் 59 சதவீதம் கொங்கு மண்டலத்திலிருந்து பெறப்பட்டவைதான்.

Latest Videos

கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என அதிமுகவினர் இப்போது வரை முழக்கமிட்டு வருகின்றனர். இருப்பினும் அண்மையில் முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று வெளியான தமிழக அரசின் 2023ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூட கொங்கு மண்டலம் சார்ந்த அறிவிப்புகள் பல வெளியாகி உள்ளது.

கொங்க மண்டலத்தை கைப்பற்றும் முயற்சியாக இது இருக்குமோ ? அதனால் தான் ஈரோடு, கோவை, சேலம் போன்ற மாவட்டங்களை முன்னிறுத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதா ?  கேள்வியும் எழுந்துள்ளது. கொங்கு மண்டலம் சார்ந்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு, 

*கோவை அவிநாசி சாலை முதல் சத்தியமங்கலம் வரை ரூ.9000 கோடியில் மெட்ரோ ரயில் சேவை திட்டம் செயல்படுத்தப்படும்.

*ஈரோடு மாவட்டத்தில் 80,567 ஹெக்டேர் வனப்பரப்பில் "தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்" அமைக்கப்படும்.

*ரூ.800 கோடி செலவில் சேலத்தில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

*கோவையில் ரூ.172 கோடி செலவில் இரண்டு கட்டங்களாக செம்மொழி பூங்கா அமைக்கப்படும்.

*சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச WiFi வசதி செய்து தரப்படும்.

*ரூ..410 கோடி செலவில் கோவை, விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.

*எழில்மிகு கோவை, மாமதுரை பெயர்களில் இந்த இரு நகரங்களையும் மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படும்.

*மதுரை, கோவை, திருச்சி, நீலகிரியில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும்.

*கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ரூ80 கோடி மதிப்பீட்டில் அதி நவீன திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும்.

இதையும் படிங்க..Tamil Nadu Budget 2023-24 Highlights : தமிழ்நாடு பட்ஜெட் 2023ன் முக்கிய அம்சங்கள் இதோ !!

இதையும் படிங்க..இலவச Wifi முதல் டெக் சிட்டி வரை.. பட்ஜெட்டில் நிதியமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன.?

click me!