அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த ஓபிஎஸ் அணி, அமமுக இணைய வேண்டும் என இருதரப்பிலும் கோரிக்கை வலுத்துள்ள நிலையில் பெரியகுளத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளுக்கு இடையே உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. இதனையடுத்து, ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக கைப்பற்றும் முயற்சியில் இபிஎஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளார். இதனால், ஓபிஎஸ்- டிடிவி. தினகரன்- சசிகலா சந்திப்பு எந்த நேரத்திலும் நடைபெறலாம் என கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் தேனியில் நடைபெற்ற போராட்டத்தில் ஓபிஎஸ் அணியினர் டிடிவி. தினகரன் அணியோடு இணைந்து கடந்த சில நாட்களுக்கு முன் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுடன் சந்தித்து ஒன்றிணைந்து செயல்படுவோம் என தெரிவித்ததை தொடர்ந்து இன்று பெரியகுளம் தென்கரை பகுதியில் அதிமுக தொண்டர் முத்து என்பவர் ஓபிஎஸ் ஆதரவாளரான முத்து என்பவர் வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது.
அதில், ஜெயலலிதா படத்துடன் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், ஆகியோர் புகைப்படங்களுடன் ஒற்றுமையே வலிமை, ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கழகத் தொண்டர்களே வாருங்கள் ஒன்றிணைவோம். அஇஅதிமுக கழகத்தில் ஒற்றிணைவோம் இரட்டை இலையை வென்றெடுப்போம் என தெரிவித்துள்ளார்.