ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு... இபிஎஸ் என்ன செய்ய போகிறார்? வீழ்வாரா? எழுவாரா?

By vinoth kumar  |  First Published Mar 20, 2023, 2:02 PM IST

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். 


அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர் செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தலுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிராபகர் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்கள், அவசர வழக்காக நேற்று விசாரிக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 24ம் தேதி வரை  தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டதுடன், தேர்தலை எதிர்த்த வழக்குகளையும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்குகளையும் மார்ச் 22ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Latest Videos

இதையும் படிங்க;- பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம்!ஆனால், நீதிபதி வைத்த திடீர் ட்விஸ்ட்! யாருக்கு சாதகம் ஓபிஎஸ்க்கா? இபிஎஸ்க்கா?

இந்நிலையில், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானதாக கூறவில்லை எனவும் அதனை நிலுவையில் உள்ள மனுவில் தான் முடிவு செய்ய முடியும் என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  பொதுச்செயலாளர் என்று அறிவித்தால் இபிஎஸ் கண்டிப்பாக ஜெயிலுக்கு போவார்.. ஓபிஎஸ் ஆதரவாளர் பகீர்..!

இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் நீதிபதி குமரேஷ் பாபு முன் முறையீடு செய்யப்பட்டது.  இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மற்ற வழக்குகளுடன் பன்னீர்செல்வத்தின் மனுவையும் மார்ச் 22ம் தேதி விசாரணை எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் தெரிவித்தார்.

click me!