தமிழகத்தில் கட்சி வளரவே இல்ல... அதுக்குள்ள இத்தனை கோஷ்டியா...!! தலை சுற்றும் அமித்ஷா, மோடி..!!

By Ezhilarasan BabuFirst Published Feb 27, 2020, 1:29 PM IST
Highlights

யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் இருப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு அப்படியே கிடப்பில் போட்டு வைப்பதே சிறந்தது என பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது . 

தமிழ்  பாஜக தலைவர் பதவியை பிடிப்பதில் பாஜக முன்னணி தலைவர்களுடையே கடும் போட்டி நிலவி வருவதால் ,  யாரை தலைவராக நியமிப்பது என்ற குழப்பத்தில் பாஜக தேசியத் தலைமை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது .  அதே நேரத்தில் தற்போது யாராவது ஒருவரை தலைவராக நியமித்தால் அது கட்சிக்குள் குழப்பத்தையும் கோஷ்டி பூசலையும் ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தில் பாஜக   தலைவரை நியமிப்பதை  தேசிய தலைமை, ஒத்திபோட்டுள்ளதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர்-1 ஆம் தேதி தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் இதனையடுத்து கடந்த ஆறு மாத காலமாக தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது . 

இந்நிலையில் தலைவர் பதவியை பிடித்ததில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ,  இல. கணேசன் , வானதி சீனிவாசன் ,  கருப்பு முருகானந்தம் பேராசிரியர் சீனிவாசன்  எனப் பல்வேறு தலைவர்கள் தனித்தனியாக கோஷ்டிகளாக செயல்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது .  இந்த கோஷ்டிப் பூசல் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வெளிப்பட்டது  காணமுடிந்தது .   பாஜகவின் நிலையை அறிந்த தேசிய தலைமை ,  தமிழகத்தில்  கட்சி இன்னும் வளரவே இல்லை ,  அதற்குள் இத்தனை கோஷ்டிகளாக இருந்தால்  தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாது என்று டெல்லி மேலிடம் தமிழக பாஜக மீது கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  யாரையாவது ஒருவரை கட்சி தலைமையாக நியமித்தால்,  அது கோஷ்டி பூசலை  மேலும் அதிகப்படுத்திவிடும் என்பதால் தற்போதைக்கு தலைவர் நியமனத்தை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது .

 

இது ஒருபுறமிருக்க பாஜக இளைஞரணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி முருகானந்தம் தேசிய தலைமையிடம் நல்ல நெருக்கத்தில் இருப்பதால் அவருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் அதிமுகவில் இருந்து பிரிந்து வந்து  பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன் ,  அடிக்கொரு முறை டெல்லிக்கு சென்று அங்கு முகாமிட்டு தமிழகத்தின் தனக்குள்ள செல்வாக்கை எடுத்துக் கூறி வருகிறாராம் .  அதேபோல் தமிழகத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சியை அதிமுக-திமுகவுக்கு  இணையாகவளர்க்கமுடியும் என்றும் அவர் கூறி வருகிறாராம் .

இந்நிலையில் கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்ற குழப்பத்தில் இருப்பதால் இன்னும் சில மாதங்களுக்கு அப்படியே கிடப்பில் போட்டு வைப்பதே சிறந்தது என பாஜக தேசிய தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது .  தமிழக சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சித்  தலைவர் பதவியை பெற்றால்  மட்டுமே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு  வேண்டியவர்களுக்கு எம்எல்ஏ சீட்டை வழங்க முடியும் என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் பாஜக முன்னணி தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக  கூறப்படுகிறது. 

 

 

click me!